
ரிசர்வ் வங்கி Repo வட்டி விகிதத்தை 0.25% சதவீதம் குறைத்துள்ளது. இதன் மூலம், 6.5% என்ற அளவில் இருந்த ரெப்போ வட்டி 6.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதக் குறைப்பு ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த வட்டி விகிதக் குறைப்பு நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் விலை அதிகரிப்பு, பணவீக்கம் அதிகரிப்பு என்று இருந்த நிலையிலே வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்காமலே இருந்தது. தொடர்ந்து வட்டி விகிதங்களை அதிகரித்து பணவீக்கத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்து வந்தது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போது பணவீக்கம் படிப்படியாக கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது என பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பட்ஜெட்டிலும் அதே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து தற்போது ரிசர்வ் வங்கியும் அதே கருத்தில் கொண்டு வட்டி விகிதங்களை முதல்முறையாக குறைத்திருக்கிறது. கடந்த 11 முறை இதில் மாற்றம் செய்யப்படாத நிலையில் தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இதனால் யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும் என்று பார்த்தால், வீட்டுக் கடன் வாங்குபவர்கள், வாகனங்களுக்கான கடன் வாங்குபவர்கள் ஆகியோருக்கு பலன் கிட்டும். வாகன கடன்கள் மற்றும் வீட்டுக் கடன் வாங்குபவர்கள் ஓரளவுக்கு வட்டி குறைவாக புதிதாக கடன் வாங்குவதற்கான வாய்ப்பை இது அளிக்கிறது. அதே சமயத்திலே பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த வட்டி விகிதக் குறைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சியிலே ஊக்கம் ஏற்படும்.
இந்த மாற்றம் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முக்கிய மாற்றமாக இருக்கும். வட்டி விகிதக் குறைப்பு மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது. இது நம் நாட்டின் பொருளாதார சீரமைப்பின் புதிய பாதைக்கு முன்னேறும் பொற்காலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.