
புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கூட்டத்தொடரிலேயே அந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது: அதன் அடிப்படையில், நேற்று புதிய வருமானவரி மசோதா என்பது தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
1961-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வருமான வரி மசோதாவை அறிமுகப்படுத்திய போது நிர்மலா சீதாராமன் பேசியதாவது, “தற்போதுள்ள சட்டத்தில் 800-க்கும் மேற்பட்டுள்ள பிரிவுகள் உள்ளன. ஆனால், இப்போது தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவில் 536 பிரிவுகள் மட்டுமே உள்ளன.
மேலும் இந்தப் புதிய வருமான வரி மசோதாவில் 5 கொள்கைகளான நெறிப்படுத்தப்பட்ட கட்டமைப்பு மற்றும் மொழி, ஒருங்கிணைந்த மற்றும் சுருக்கமான மொழி, குறைந்தபட்ச வழக்கு, நடைமுறைப்படுத்துதல் மற்றும் வெளிப்படைத்தன்மை, கற்றல், மாற்றியமைத்தல் மற்றும் திறமையான வரி சீர்திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சட்டம் கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்குப் பரிந்துரைக்கப்படுகிறது. இந்தக் குழு சட்டத்தை ஆராய்ந்து, தேவைப்பட்ட மாற்றங்களைச் செய்யும்” என்று பேசினார். இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்புகளைப் பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மார்ச் 10-ம் தேதி, இந்திய நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு துவங்கும்போது, புதிய வருமான வரி மசோதா பற்றிய அறிக்கையை கூட்டு நாடாளுமன்றக் குழு சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து, அடுத்த நிதியாண்டிலிருந்து (2025) புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.