
இந்தியாவில் கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. Donald Trump அதிபரான பிறகு சில காலம் மட்டுமே குறைந்த தங்கம் விலை மீண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கம் விலையை பொறுத்தவரை, கொரோனாவுக்கு முன்பு வரை 22 கேரட் தங்கம் என்பது 4000 என்ற ரேஞ்சில் தான் இருந்தது. ஆனால் கொரோனாவுக்கு பிறகு உயரத் தொடங்கிய தங்கத்தின் விலை, அதன் பிறகு குறையவே இல்லை, தொடர்ந்து உயர்ந்த வண்ணமே உள்ளது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உச்சத்தை தொட்டு புதிய சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.
தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.10-ம், சவரனுக்கு ரூ.80-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 990-க்கும், ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்து 920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,890-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.63,120-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இது உலகளாவிய பொருளாதார நிலை, பங்குச் சந்தை மாற்றங்கள், மற்றும் மைய வங்கிகள் வட்டி விகிதங்களை மாற்றுவது போன்ற பல காரணங்களால் ஏற்பட்டிருக்கலாம்.