
இன்றைய நாளில் தங்கத்தின் விலை வழக்கம்போல உயர்ந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ₹160 உயர்ந்து ₹64,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிக வேகத்தில் இல்லாமல், மிதமான வேகத்தில் தங்கம் ₹65,000-க்கு நெருங்கிக்கொண்டே செல்லும் நிலை உள்ளது. கிராமுக்கு ₹20 உயர்ந்து 22 கேரட் ஆபரண தங்கம் ₹8,075-க்கு விற்பனை ஆகிறது.
“வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், கடந்த சில நாட்களுக்கு முன்பு 107 ரூபாய் இருந்த வெள்ளி, தற்போது 1ரூபாய் உயர்ந்து 108 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது. அதாவது, வெள்ளி விலையில் பெரிய அளவிலான மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கு விற்பனை ஆகின்றது.”
நாம் ஒவ்வொரு நாளும் தனித்தனியாக பார்த்தால், தங்கத்தின் விலை உயர்வு நேற்றைய நாளில் சவரனுக்கு 80 ரூபாயும், கிராமுக்கு 10 ரூபாயும் உயர்ந்தது. இது ஒரு பெரிய அளவிலான விலை உயர்வு இல்லை என்றாலும், ஒட்டுமொத்தமாக பார்த்தால், தங்கம் சின்ன அளவில் விலை உயர்வுகளை சந்தித்து, தொடர்ந்து ஒரு பெரிய விலை உயர்வாகவே பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை ஏன் உயர்ந்துகொண்டே போகின்றது என்ற கேள்வி, இப்போது தினசரி கேட்கப்படும் கேள்வியாக மாறிவிட்டது. இந்தியாவிலும், உலக சந்தைகளிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கட்டண விதிப்பு, புவிசாரா அரசியல் பதற்றங்கள், பொருளாதார நிச்சயமற்ற நிலை, வர்த்தகப் போர் ஆகியவைகளால் தங்கத்தின் விலை இந்தியாவில் உயர்ந்துகொண்டே இருக்கின்றது.
தொடர்ந்து ஏழாவது வாரமாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது. கடந்த ஏழு வாரங்களில், 10 கிராமுக்கு ₹10,000 வரை தங்கத்தின் விலை உயர்ந்திருக்கின்றது. சர்வதேச சந்தை நிலவரம், அரசியல், பொருளாதார நிலை மற்றும் மத்திய வங்கிகள் வெளியிடும் அறிவிப்புகள் இவை எல்லாம் தங்கத்தின் விலையை உயர்த்தி வருகின்றன.
மேலும் பொருளாதார நிச்சயமற்ற நிலை, பணவீக்கம், புவிசாரா அரசியல் திட்டங்கள், மத்திய வங்கிகள் தங்களுடைய தங்கத்தை வாங்கி இருப்பு வைத்தல், சுரங்க உற்பத்தி குறைவு போன்றவை தங்கத்தின் விலை உயர்வுக்கான முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
“இந்த நிலவரம் தொடர்ந்தால், தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் மேலும் அதிரடியான மாற்றங்கள் ஏற்படலாம்.”