
சம்பளம் வாங்கும் ஊழியர்கள்: வருடாந்திர தேர்வு.
சம்பளம் பெறும் ஊழியர்கள் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் தங்கள் வரி முறையைத் தேர்ந்தெடுக்கலாம். எந்த வரி முறையும் தேந்தெடுக்கப்படாமல் இருந்தால், முதலாளிகள் புதிய வரிவிதிப்பு முறையின் கீழ் வரிபிடிப்பார்கள்.
இருப்பினும், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139(1) இன் கீழ், உரிய தேதிக்கு முன்னர் உங்கள் வருமான வரி வருமானத்தை (ITR) தாக்கல் செய்யும்போது பழைய வரி முறைக்கு மாறலாம் மற்றும் அதிகமாக செலுத்தப்பட்ட வரியைத் திரும்பப் பெறலாம்.
மேலும்,வரி சேமிப்பு முதலீடுகள் ஏதும் இருந்தால் இருந்தால், ஒருவர் பழைய வரி முறையைத் தேர்வுசெய்யலாம். மாறாக, சலுகை வரி அடுக்குகளை விரும்பினால், புதிய வரி முறையைத் தேர்வுசெய்யலாம்.
வணிக தொழில் செய்வோர்: வரையறுக்கப்பட்ட நெகிழ்வுத்தன்மை.
நீங்கள் ஒரு வணிகம் அல்லது தொழிலில் இருந்து வருமானம் ஈட்டினால், வரி விதிகளை மாற்றுவதில் உங்களுக்கு வரையறுக்கப்பட்ட நெகிழ்வுத்தன்மை உள்ளது. புதிய வரி விதிப்பிலிருந்து நீங்கள் விலகினால், நீங்கள் ஒரு முறை மட்டுமே மீண்டும் மாற முடியும்.
புதிய வரி முறைக்கு மாறிய பிறகு, எதிர்காலத்தில் நீங்கள் மீண்டும் பழைய முறைக்குத் திரும்ப முடியாது.
எனவே, வணிகம் செய்வோர் தங்கள் தேர்வைச் செய்வதற்கு முன் கவனமாக சிந்திக்க வேண்டும், ஏனெனில் அது நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
மேலும், முடிவெடுப்பதற்கு முன் இரண்டு முறைகளின் கீழும் உங்கள் வரியைக் கணக்கிடுவது சிறந்தது. தேவைப்பட்டால், உங்கள் வருமானம் மற்றும் நிதி இலக்குகளுக்கு மிகவும் வரி-திறனுள்ள தேர்வை நீங்கள் தேர்வு செய்வதை உறுதிசெய்ய ஒரு வரி நிபுணரை அணுகலாம்.