
பங்குச் சந்தை சரிவில் சில ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் அதன் சராசரியை விட சற்று அதிக வருமானம் வழங்கியுள்ளன. குறிப்பாக இந்த மியூச்சுவல் ஃபண்டுகள் 2024 ஆம் ஆண்டு 26.38%-க்கும் அதிகமாக லாபம் ஈட்டியுள்ளன. இந்த மியூச்சுவல் ஃபண்டுகள் மார்ச் மாதம் சிறப்பாக செயல்படும் என கணிப்புகள் கூறுகின்றன.
சென்ற வாரம் பங்குச் சந்தையின் தொடர் சரிவால் சந்தை முதலீட்டாளர்கள் மட்டுமின்றி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் இருந்து வெளியேறுவதில் தீவிரம் காட்டத் தொடங்கினர். ஆனால் அது சரியானது இல்லை என பல நிபுணர்கள் அறிவுரை கூறினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து இப்பொழுது ரிஸ்காகவும் கருதப்படுகிறது. ஆனால் நீண்டகால் அடிப்படையில் காணும்பொழுது ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் 10 ஆண்டுகளில் சராசரியாக 19 சதவீத வருமானத்தை வழங்கியுள்ளன.
அப்படி நீங்கள் நீண்டகால அடிப்படையில் ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய நினைத்தால், அதற்கு சிறந்த ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் இவைதான்.
- ஆக்சிஸ் ஸ்மோல் கேப் ஃபண்ட்
- எஸ்பிஐ ஸ்மோல் கேப் ஃபண்ட்
- கோடக் ஸ்மோல் கேப் ஃபண்ட்
- நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட்