
இந்தியாவில் தங்கத்திற்கு ஒரு தனி இடம் இல்லை ஒரு ஸ்பெஷலான் இடம் உண்டு என்றே கூறலாம். திருமணங்கள் முதல் பண்டிகைகள் வரை, தங்கம் வாங்குவது, கிஃப்ட் கொடுப்பது ஒரு வழக்கமாகவே உள்ளது. உலகின் மிகப்பெரிய தங்க இறக்குமதி நாடுகளில் ஒன்றாக இந்தியா பல ஆண்டுகளாக இருப்பதற்கும் இதுவே காரணம்.
மாறிவரும் காலங்களுடன், தங்கத்தில் முதலீடு செய்யும் முறைகளும் மாறிவிட்டன. இப்போது மக்கள் வெறும் தங்கம் அதாவது நகைகள், நாணயங்கள் மட்டுமல்மாமல், டிஜிட்டல் தங்கம், தங்க பத்திரங்கள், தங்க மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் தங்க ETFகள் (எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள்) போன்ற திட்டங்களிலும் முதலீடு செய்து வருகின்றனர். அதனால் இப்பொழுது டிரெண்டிங்கில் இருக்கும் தங்க ETFகள் எப்படி பாதுகாப்பாக முதலீடு செய்வது, இந்த ஆண்டின் டாப் 10 கோல்ட் ஈடிஎஃப் பற்றி இனி பார்க்கலாம்.
தங்க ETFகள் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுகின்றன, மேலும் சந்தை விலையில் தொடர்ந்து வாங்கவும் விற்கவும் முடியும் . தங்க ETFகள் தற்போதைய நிஜ தங்க விலைகளுடன் இணைக்கப்பட்ட செயலற்ற முதலீட்டு கருவிகளாகும், மேலும் அவை தங்கக் கட்டிகளில் முதலீடு செய்கின்றன. அதனால் இந்தாண்டின் சிறந்த 10 Gold ETF ஃபண்டுகள் இவைதான்.. .
1. நிப்பான் இந்தியா ETF கோல்ட் பீஸ் (மொத்த மதிப்பு: ரூ. 16,976 கோடி)
2. HDFC Gold ETF (AUM: ரூ. 8,020 கோடி)
3. ஐசிஐசிஐ புருடென்ஷியல் கோல்ட் இடிஎஃப் (மொத்த மதிப்பு: ரூ. 6,993 கோடி)
4. கோடக் கோல்ட் இடிஎஃப் (மொத்த மதிப்பு: 6,654 கோடி)
5. எஸ்பிஐ கோல்ட் இடிஎஃப் (மொத்த மதிப்பு: 6,573 கோடி)
6. UTI தங்க ETF (மொத்த மதிப்பு: ரூ. 1,599 கோடி)
7. ஆக்சிஸ் கோல்ட் இடிஎஃப் (மொத்த மதிப்பு: ரூ. 1,304 கோடி)
8. ABSL தங்க ETF (மொத்த மதிப்பு: ரூ. 1,023 கோடி)
9. DSP கோல்ட் ETF (மொத்த மதிப்பு: ரூ. 722 கோடி)
10. மிரே அசெட் கோல்ட் இடிஎஃப் (மொத்த மதிப்பு: ரூ. 521 கோடி)