
சந்தை சூழ்நிலை ஒரு சில மாதங்களில் முற்றிலும் மாறலாம். செப்டம்பர் 2024 வரை, இந்திய பங்குச் சந்தை ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளை படைத்து வந்தது. ஆனால் அதன்பிறகு நிலைமை மாறிவிட்டது. நிஃப்டி 50 அதன் உச்சத்தில் இருந்து சுமார் 14% குறைந்துள்ளது. இதேபோல், நிஃப்டி மிட்கேப் 150 குறியீடு கடந்த 6 மாதங்களில் 18% க்கும் அதிகமாக சரிந்துள்ளது, அதே நேரத்தில் நிஃப்டி ஸ்மால்கேப் 250 குறியீடு கடந்த ஆண்டு டிசம்பர் 11 அன்று தொட்ட உச்சத்திலிருந்து 22% க்கு மேல் சரிந்துள்ளது.
இந்த பங்குச் சந்தை குழப்பம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர் போர்ட்ஃபோலியோக்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல SIP முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோ 20-30% சுருங்கிவிட்டது என்று கூறுகிறார்கள். குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப்) மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்ட முதலீட்டாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், பெரிய நிறுவனங்களின் (லார்ஜ்கேப்) ஃபண்டுகளிலும், வரிச் சேமிப்பு ELSS ஃபண்டுகளிலும் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் சற்று குறைவான இழப்பை சந்தித்தனர்.
இந்த ஆண்டு பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் வகைகளால் உருவாக்கப்பட்ட சராசரி வருமானத்தைப் பார்த்தால், அவை அனைத்தும் எதிர்மறையான வருமானத்தை அளித்துள்ளன. ஸ்மால்கேப் ஃபண்டுகள் (-)22% சராசரி வருமானத்தைக் கொடுத்துள்ளன, அதைத் தொடர்ந்து மிட்கேப் ஃபண்டுகள் (-)15.37% மற்றும் லார்ஜ்கேப் ஃபண்டுகள் (-)6.92%.
போர்ட்ஃபோலியோக்களின் மதிப்பில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சி SIP முதலீட்டாளர்களை சிந்திக்க கட்டாயப்படுத்தியுள்ளது – அடுத்து என்ன செய்வது? நாம் SIP ஐ தொடர வேண்டுமா அல்லது நிறுத்த வேண்டுமா? இந்த சரிவில் இருந்து மீள்வது எப்படி?
SIP ஒரு நீண்ட கால முதலீட்டு முறை, ஏமாற்றமடைய வேண்டாம்:
SIP அதாவது முறையான முதலீட்டுத் திட்டம் நீண்ட காலத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்தையில் எப்போதும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும், ஆனால் இந்த மூலோபாயம் முதலீட்டாளர்கள் வெவ்வேறு சந்தை சுழற்சிகளைப் பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது.
முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?
பீதியில் முதலீடுகளை விற்க வேண்டாம்!
பீதியில் முதலீடுகளை விற்பது சரியான உத்தி அல்ல. காலப்போக்கில் சந்தை தன்னைத் திருத்திக் கொள்கிறது என்பதற்கும், பொறுமையுடன் இருக்கும் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்பதற்கும் வரலாறு சாட்சி.
போர்ட்ஃபோலியோவை சமநிலைப்படுத்தவும்!
ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப்பில் மட்டும் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவில் சமநிலையை கொண்டு வர வேண்டும். Large cap, Flexi Cap, value அடிப்படையிலான மற்றும் Hybrid ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் அபாயத்தைக் குறைக்கலாம்.
SIP- ஐ தொடரவும்!
சந்தை வீழ்ச்சியடையும் போது, SIP முதலீட்டாளர்கள் குறைந்த விலையில் அதிக யூனிட்களை வாங்க வாய்ப்பு கிடைக்கும். சந்தை உயரும் போது, இந்த unit-கள் அதிக வருமானம் தரும். உதாரணமாக, நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 முதலீடு செய்து, NAV ரூ.500ல் இருந்து ரூ.400 ஆகக் குறைந்திருந்தால், முன்பைவிட அதிக யூனிட்களை நீங்கள் வாங்க முடியும். இது நீண்ட காலத்திற்கு பயன் தரும்.
Hybrid Fund-களைக் கவனியுங்கள்!
சமபங்கு மற்றும் கடனின் கலவையான ஹைப்ரிட் நிதிகள் சந்தையில் ஸ்திரத்தன்மையை பராமரிக்க உதவுகின்றன. ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி இரண்டையும் விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
சுருக்கமாக, சந்தை சரிவுகள் கவலைக்குரியதாக இருக்கலாம், ஆனால் முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோக்களை மதிப்பாய்வு செய்து புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய இது ஒரு வாய்ப்பாகும். பயப்படுவதற்குப் பதிலாக, பொறுமை மற்றும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது முக்கியம். சரியான சொத்து ஒதுக்கீடு, தொடரும் SIP-கள் மற்றும் சந்தை சரிவுகளில் நல்ல வாய்ப்புகளை கண்டறிதல் ஆகியவை நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.