
இளமைக் காலத்தில் சேமிக்கத் தவறியதால் ஓய்வுக்குப் பிறகு சிரமத்தை எதிர்கொள்ளும் பலரை நாம் பார்த்து இருப்போம். ஆனால், சரியான முறையில் சேமிப்பை நீங்கள் செய்து வந்தால் ஓய்வு பெறும் போது உங்கள் கையில் ரூ.20 கோடிக்கு மேல் இருக்கும். அதை எப்படிச் செய்வது.. இதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?
இந்த காலத்தில் நாம் கஷ்டப்பட்டுச் சம்பாதித்தால் மட்டும் பத்தாது. அதைச் சரியான வழிகளில் சேமித்து முதலீடு செய்ய வேண்டும். அப்போது தான் இந்த பணவீக்கத்தைச் சமாளித்துச் சேமிக்க முடியும்.
முதலீடு
அதிலும் இந்த காலத்தில் ஓய்வூதியம் நமக்குக் கிடைக்காது. இதனால் இப்போது நமக்கு சேமிப்பும் முதலீடும் அவசியமாகிறது. ஐடியில் வேலை செய்யும் இளைஞர்கள் லட்ச கணக்கில் சம்பாதித்தாலும் கூட சேமிப்பதில்லை. இது ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு மிகப் பெரிய சிரமத்தைத் தரும். ஆனால், நாம் ஒரு சின்ன மாற்றத்தைச் செய்தால் ஓய்வு பெற்ற பிறகும் யாருடைய தயவும் இல்லாமல் இருக்கலாம்.
அதுதான் சேமிப்பு + முதலீடு இந்த காலத்தில் நீங்கள் பணத்தை வங்கியில் சேமித்து வைத்தால் பணவீக்கம் காரணமாகச் சத்தமே இல்லாமல் அதன் மதிப்பு சரிந்துவிடும். இதனால் நல்ல லாபம் தரும் விஷயங்களில் நீங்கள் முதலீடு செய்யலாம். பங்குச்சந்தை, கடன் பத்திரங்கள், தங்கம் எனப் பல முதலீடுகள் உள்ளன. உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் கேட்டுச் சரியானவற்றில் முதலீடு செய்தால் போதும். ஓய்வு பெறும் போது உங்கள் கையில் ரூ.50 கோடிக்கு மேல் இருக்கும். இதை ஒரு உதாரணத்துடன் நாம் பார்க்கலாம்.
ஐடியில் வேலை செய்யும் 23 வயது இளைஞர் ரூ.45 ஆயிரம் சம்பாதிக்கிறார் என வைத்துக் கொள்வோம். அதில் 50% தொகைக்கு மேல் அதாவது மாதம் ரூ.24500ஐ முதலீடு செய்யுங்கள். எது ரூ.24500ஆ என நீங்கள் ஷாக் ஆகலாம்.. உண்மையில் 23 வயதில் உங்களுக்குப் பெரியளவில் பொறுப்புகள் இருக்காது. திருமணமும் ஆகியிருக்காது. எனவே, நீங்கள் செய்யும் செலவு பெரும்பாலும் தேவையற்றதாகவே இருக்கும். எனவே, அதுபோன்ற செலவுகளைக் குறைத்தால் ஈஸியாக இந்த பணத்தைச் சேமிக்கலாம்.
திருமணத்திற்குப் பிறகு செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் வருமானமும் அதேபோல அதிகரிக்கும். மேலும், உங்கள் கணவன் அல்லது மனைவி வேலைக்குச் சென்றால் அதுவும் கூடுதல் வருமானம். எனவே, அப்போது மாதம் ரூ.24500 முதலீடு செய்வது சிரமமாக இருக்காது. இதேபோல நீங்கள் ஓய்வு பெறும் வரை மாதம் ரூ.24500 முதலீடு செய்யுங்கள். இப்போது ரூ.24500 பெரிய தொகை போலத் தெரிந்தாலும் 10, 15 ஆண்டுகளில் அது உங்களுக்கு பாரமாக இருக்காது.
20 கோடிக்கு மேல் கிடைக்கும்
ஓய்வு பெறும் வரை, அதாவது 37 ஆண்டுகளுக்கு இதேபோல மாதம் ரூ.24,500 முதலீடு செய்யுங்கள். அதன்படி பார்த்தால் நாம் மொத்தம் ரூ.1.08 கோடி முதலீடு செய்திருப்போம். இதில் நமக்கு ஆண்டுக்கு 12% ரிட்டர்ன் கிடைக்கிறது என வைத்துக் கொண்டால் ஓய்வு பெறும் போது ரிட்டன் மட்டும் ரூ.19.18 கோடி கிடைக்கும். ஆக மொத்தத்தில் நமது கணக்கில் ரூ.20,27,25,529 இருக்கும். ஆண்டுக்கு 6% பணவீக்கம் எனப் போட்டுப் பார்த்தால் இது தற்போதைய மதிப்பில் ரூ. 2.32 கோடியாகும். இதை வைத்து ஓய்வுக் காலத்தை நாம் சிறப்பாகவே கழிக்கலாம்.
இரண்டு விஷயம் முக்கியம்
முதலீட்டைப் பொறுத்தவரை எவ்வளவுக்கு எவ்வளவு முன்கூட்டியே ஆரம்பிக்கிறீர்களோ.. அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. மேலும், மாதம் தவறாமல் தொடர்ந்து முதலீடு செய்வதும் அவசியமாகும். இந்த இரண்டையும் மட்டும் மறக்காமல் பின்பற்றினால் போதும். ஓய்வுக்குப் பிறகு பிரச்சினை இல்லாமல் வசிக்கலாம்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.