
MUTUAL FUNDS business stock profit growth investment money income mutual banking asset economy interest mutual fund coins money saving
தற்போது பலருக்கும் எதிர்கால தேவைக்கான பணத்தை வங்கி கணக்கில் அப்படியே இருப்பு வைத்திருக்காமல் சரியான கருவிகளில் முதலீடு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அந்த வகையில் 2025 ஆம் நிதி ஆண்டில் மாதந்தோறும் 1 லட்சம் ரூபாயை முதலீடு செய்ய தயாராக இருப்பவர்கள் எப்படி அதனை பிரித்து முதலீடு செய்யலாம் என்பது குறித்து நிபுணர்கள் சில யோசனைகளை வழங்கியுள்ளனர்.
ஒரு பெண் மாதந்தோறும் 1 லட்சம் ரூபாயை மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாகவும் அதற்காக 10 திட்டங்களை தேர்வு செய்து மாதம் 10,000ஐ முதலீடு செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த அணுகுமுறை தனக்கு வெற்றி அளிக்குமா என்றும் அவர் கேட்டிருக்கிறார்.
இதற்கு இன்வெஸ்டோகிராபி நிறுவனர் ஸ்வேதா ஜெயின் எக்னாமிக் டைம்ஸில் வெளியிட்டுள்ள பதிலில், பல்வேறு மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை தேர்வு செய்து அதில் சிறு சிறு தொகையை பணமாக போட்டு வைத்தால் அதனை மேலாண்மை செய்வது கடினமானதாக இருக்கும் என்றும் அதனை கண்காணித்து சந்தை போக்குகளுக்கு ஏற்ப போர்ட்போலியோவை மாற்றி அமைப்பது கடினமானதாக இருக்கும் என்றும் கூறுகிறார்.
1 லட்சம் ரூபாய் மாதந்தோறும் முதலீடு செய்ய தயாராக இருக்கிறேன் என நீங்கள் கூறியிருக்கிறீர்கள், எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்வது தான் உங்களுடைய எண்ணமாக இருந்தால் 1 லட்சம் ரூபாயை பத்தாக பிரித்து பத்து மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதை தவிர்த்து விட்டு இந்த ஒரு லட்சம் ரூபாயை நான்காக பிரித்துக் கொள்ளுங்கள் என அறிவுரை வழங்கி இருக்கிறார்.
குறிப்பிட்ட நான்கு சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை தேர்வு செய்து அதில் 25 ஆயிரம் என உங்களுடைய ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பிரித்து முதலீடு செய்யுங்கள் என அவர் அறிவுரை வழங்கியுள்ளார். இவ்வாறு குறைந்த திட்டங்களில் முதலீடு செய்திருப்பதன் மூலம் நாம் சந்தை போக்குக்கு ஏற்ப போர்ட் போலியோவை மாற்றிக் கொள்ளலாம் என்றும் திட்டங்களின் வளர்ச்சியை கண்காணிப்பதும் எளிமையாக இருக்கும் என்றும் கூறுகிறார்.
எடுத்துக்காட்டாக அவர் பரிந்துரைகள் திட்டங்கள்:
DSP Nifty 50 Index Fund – மாதம் ரூ.25,000
Motilal Oswal Midcap Fund – மாதம் ரூ.25,000
ICICI Prudential Bluechip Fund – மாதம் ரூ.25,000
Bandhan Smallcap Fund – மாதம் ரூ.25,000
இந்த நான்கு ஃபண்டுகளும் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப போர்ட் போலியோவை பேலன்ஸ் செய்துவிடும் என கூறியுள்ள அவர், தேவைப்பட்டால் இதில் ஸ்மால் கேப்பிற்கு பதிலாக Parag Parikh Flexi Cap Fundஐ சேர்த்து கொள்ளலாம் அல்லது மாதம் ரூ.20,000 என ஐந்து திட்டங்களில் முதலீடு செய்யலாம் என அறிவுரை வழங்கியுள்ளார்