
நமக்கு முந்தைய தலைமுறையினர் சேமிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். இது 30 ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் இன்றைய பொருளாதாரத்தில், அதிகரித்து வரும் பணவீக்கம், தேவை போன்றவற்றை சமாளிக்க சேமிப்பு கை கொடுக்குமா என்றால் அதற்கு பதில் கேள்விக்குறிதான் பொதுவாக நாம் எல்லோருமே நமது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நமது வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து வருகிறோம். பெரும்பாலான மக்கள் வங்கி அல்லது அஞ்சல சேமிப்பு திட்டங்களில் பணத்தை டெபாசிட் செய்து வருவர்.
குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு நாம் அதை எடுக்கும் போது கூடுதலாக வட்டி வருமானமும் கிடைக்கும். அசல் தொகையை விட கூடுதலாக பணம் கிடைப்பதால் சந்தோஷம் அடைகிறார்கள். ஆனால் பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது, அந்த வட்டி வருமானம் மிகவும் குறைவாகவே இருக்கும். அதனால் பணத்தை சேமிக்கும் பழக்கத்தை இன்றோடு விட்டு விடுங்கள். அதற்கு பதிலாக பணத்தை ஸ்மார்ட்டாக முதலீடு செய்ய ஆரம்பியுங்கள்.
பணத்தை முதலீடு செய்தால் அது நமக்கு நல்ல ஆதாயம் தரும். பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யுங்க. பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதை காட்டிலும் மியூச்சுவல் பண்டுகள் மூலம் முதலீடு செய்வது சிறந்தது. குறுகிய கால அடிப்படையில் முதலீடு செய்வதற்கு பதிலாக நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வது நல்லது. ஏனென்றால் பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் என்பது சாதாரணமானது.
எனவே எஸ்பிஐ வாயிலாக தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்தால், குறுகிய கால ஏற்ற இறக்கம் குறித்து நாம் எப்போதும் பயப்படதேவையில்லை. எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்ய தொடங்கிறமோ அவ்வளவு சீக்கிரம் நாம் நமது நிதி இலக்கை விரைவாக எட்ட முடியும். எனவே முதலீடு செய்ய தொடங்குகள். குறிப்பாக எஸ்ஐபி முதலீடுகள் மூலம் உங்கள் குழந்தையின் நிதி எதிர்காலத்தை பாதுகாக்க சீக்கிரமாக தொடங்குகள்
15 ஆண்டுகளுக்கு 12 சதவீதம் வருமானத்துடன் மாதந்தோறும் ரூ.10,000 முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் ரூ.1 கோடி திரட்டலாம். இதற்கு நிலைத்தன்மையும் ஆரம்ப திட்டமிடலும் முக்கியம். இதற்கு மூன்று படிகளை பின்பற்ற வேண்டும். சீக்கிரமாக தொடங்குகள், புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள் மற்றும் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்ற தொடர்ந்து உறுதியாக இருங்கள். பணத்தை சேமிப்பதை காட்டிலும் முதலீடு செய்வதுதான் எப்போதும் சிறந்தது .