
அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பால் இந்தியா மட்டும் இல்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து பங்குச்சந்தைகளுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை, பிஎஸ்இ ஸ்மால்-கேப் குறியீடு 2.50% க்கும் அதிகமாக உயர்ந்தது. அதே நேரத்தில் மிட்-கேப் குறியீடு 1.75% க்கும் அதிகமாக உயர்ந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது விதிக்கப்பட்ட 26% வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார். இதை தொடர்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலையில் இந்திய பங்குச் சந்தை உயர்ந்தது. நிஃப்டி 50 குறியீடு 22,695 இல் ஏற்றத்துடன் தொடங்கி, வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் போது 22,874 என்ற இன்ட்ராடே உச்சத்தை எட்டியது. பிஎஸ்இ சென்செக்ஸ் 74,835 இல் ஏற்றத்துடன் தொடங்கி 75,319 என்ற இன்ட்ராடே உயர்வைத் தொட்டது. வெள்ளிக்கிழமை இன்ட்ராடே வர்த்தக அமர்வின் போது 1,400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தை ஏற்படுத்தியது. அதேபோல், பேங்க் நிஃப்டி இன்று 50,634 புள்ளிகளில் இடைவெளி தொடக்கத்தைக் கொண்டிருந்தது, மேலும் வங்கி குறியீடு 51,066 இன்ட்ராடே அதிகபட்சத்தை எட்டியது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பால் இந்திய மட்டும் இல்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து பங்குச்சந்தைகளுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை, பிஎஸ்இ ஸ்மால்-கேப் குறியீடு 2.50% க்கும் அதிகமாக உயர்ந்தது. அதே நேரத்தில் மிட்-கேப் குறியீடு 1.75% க்கும் அதிகமாக உயர்ந்தது.
இந்திய பங்குச் சந்தை இன்று ஏன் உயர்கிறது?
அமெரிக்க அதிபர் சீனாவை தவிர்த்து அனைத்து நாடுகளின் மீதான வரி விதிப்பையும் நிறுத்தி வைத்தார். இந்த முடிவை யாரும் எதிர்பார்க்காத நிலையில், வரி ஒத்தி வைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஷேர்மார்க்கெட்டுக்கு பாசிட்டிவான விஷயம் ஆகும். இதன் காரணமாக சந்தைகள் இன்று வலுவாக தொடங்கியுள்ளன. இதுமட்டும் இல்லாலமல் இந்திய ரிசர்வ் வங்கியும் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது. இதுவும் சந்தைக்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.
இதுமட்டும் இல்லாமல் அமெரிக்காவின் பணவீக்க விகிதம் எதிர்பார்த்தை விட குறைவாக இருப்பதாக டேட்டா வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைப்பதற்கான சூழல் உருவாகும்.