
கடந்த சில ஆண்டுகளில், மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள் வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை தரவுகள் இதைக் காட்டுகின்றன. 2016 ஏப்ரல் மாதத்தில் மாதாந்திர SIP முதலீடுகள் ரூ.3,122 கோடியாக இருந்தது. இப்போது கடந்த பல மாதங்களாக தொடர்ந்து ரூ.26,000 கோடி அளவில் உள்ளது. இது 8 மடங்குக்கும் அதிகமான வளர்ச்சியாகும். கடந்த 6 மாதங்களாக பங்குச் சந்தையில் ஏற்ற இற்றக்கங்கள் அதிகம் காணப்பட்டாலும், முதலீட்டாளர்கள் முதலீட்டை தொடங்கவும் தொடரவும் மிகச் சிறந்த நேரம் இது தான் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்
SIP முதலீடுகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள்
எளியான முதலீட்டு முறையும், நல்ல வருமானமும் நடுத்தர வர்க்கம் மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு SIP முதல் தேர்வாக மாறியுள்ளதற்கு முக்கிய காரணம். அதோடு, கடந்த 10 ஆண்டுகளின் தரவைப் பார்த்தால், பல ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் ஆண்டுதோறும் 20% க்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளன. அதாவது மாதம் வெறும் ரூ.10,000 SIP முதலீடு செய்திருந்தால் கூட, இன்று அவரது முதலீடு ரூ.44 லட்சத்தை எட்டியிருக்கும். அந்த வகையில் இந்த பதிவில், கடந்த 10 ஆண்டுகளில் 20% என்ற அளவிற்கும் அதிகமான CAGR எனப்படும் ஆண்டு சராசரி வருமானத்தை அளித்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளைப் பார்ப்போம்.
கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வருமானத்தைக் கொடுத்த மியூச்சுவல் ஃபண்டுகள்
1. Quant Small Cap Fund
இதில் கடந்த 10 ஆண்டுகளில் SIP முதலீட்டில் கிடைத்த ஆண்டு சராசரி வருமானம் 24.56% CAGR. இதில் ரூ.10,000 என்ற அளவிலான மாதாந்திர SIP முதலீடு 10 ஆண்டுகளில் ரூ.43.54 லட்சமாக உயர்ந்திருக்கும். இந்த நிதியத்தில் 10 வருட மொத்த முதலீடிற்கு கிடைத்த வருமானம் 19.17% CAGR. அதாவது இந்தத் திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 1 லட்சம் மொத்த முதலீடு கிட்டத்தட்ட ரூ.5.78 லட்சமாக அதிகரித்திருக்கும்.
2. Nippon India Small Cap Fund
கடந்த 10 ஆண்டுகளில் SIP முதலீட்டில் கிடைத்த ஆண்டு சராசரி வருமானம் 22.93% CAGR. இதில் ரூ.10,000 என்ற அளவிலான மாதாந்திர SIP முதலீடு, 10 ஆண்டுகளில் ரூ. 39.90 லட்சமாக உயர்ந்திருக்கும். இதில் 10 வருட மொத்த முதலீட்டு வருமானம் 20.44% CAGR. அதாவது இந்தத் திட்டத்தில் செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் மொத்த முதலீடு 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ரூ.6.42 லட்சமாக அதிகரித்திருக்கும்.
3. Quant ELSS Tax Saver Fund
கடந்த 10 ஆண்டுகளில் SIP முதலீட்டில் கிடைத்த ஆண்டு சராசரி வருமானம் 21.74% CAGR. இதில் ரூ.10,000 என்ற அளவிலான மாதாந்திர SIP முதலீடு, 10 ஆண்டுகளில் ரூ. 37.43 லட்சத்தை ஈட்டியிருக்கும். இதில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மொத்த முதலீட்டு வருமானம் 19.62% CAGR. அதாவது 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்தில் செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் மொத்த முதலீட்டின் மதிப்பு இப்போது ரூ.6 லட்சமாக இருக்கும்.
4. Motilal Oswal Midcap Fund
கடந்த 10 ஆண்டுகளில் SIP முதலீட்டில் கிடைத்த ஆண்டு சராசரி வருமானம் 21.47% CAGR.இதில் ரூ.10,000 என்ற அளவிலான மாதாந்திர SIP முதலீடு, 10 ஆண்டுகளில் ரூ.36.90 லட்சமாக மாறியிருக்கும். இதில் 10 ஆண்டுகளுக்கான மொத்த முதலீட்டு வருமானம் 16.99% CAGR. இந்த வருமானத்தின் அடிப்படையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்தில் செய்யப்பட்ட ரூ.1 லட்சம் என்ற அளவிலான மொத்த முதலீடு ரூ.4.80 லட்சமாக மாறியிருக்கும்.
5. ICICI Prudential Infrastructure Fund
கடந்த 10 ஆண்டுகளில் SIP முதலீட்டில் கிடைத்த ஆண்டு சராசரி வருமானம் 21.37% CAGR. இதில் ரூ.10,000 என்ற அளவிலான மாதாந்திர SIP முதலீடு, 10 ஆண்டுகளில் ரூ.36.7 லட்சமாக மாறியிருக்கும். இதில் 10 வருட மொத்த முதலீட்டில் கிடைக்கும் வருமானம் 15.53% CAGR. அதாவது 10 வருடங்களுக்கு முன்பு இந்தத் திட்டத்தில் செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் மொத்த முதலீட்டின் இன்றைய மதிப்பு இப்போது ரூ.4.23 லட்சமாக இருக்கும்.
6. Edelweiss Mid Cap Fund
கடந்த 10 ஆண்டுகளில் SIP முதலீட்டில் கிடைத்த ஆண்டு சராசரி வருமானம் 20.97% CAGR. இதில் ரூ.10,000 என்ற அளவிலான மாதாந்திர SIP முதலீடு, 10 ஆண்டுகளில் ரூ. 35.91 லட்சமாக மாறியிருக்கும். இதில் 10 வருட மொத்த முதலீடில் கிடைத்த வருமானம்: 17.26% CAGR. இந்தத் திட்டத்தில் செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் மொத்த முதலீடு இப்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.4.91 லட்சமாக உயர்ந்திருக்கும்.
7. Invesco India Infrastructure Fund
கடந்த 10 ஆண்டுகளில் SIP முதலீட்டில் கிடைத்த ஆண்டு சராசரி வருமானம் 20.67% CAGR.இதில் ரூ.10,000 என்ற அளவிலான மாதாந்திர SIP முதலீடு, 10 ஆண்டுகளில் இப்போது ரூ. 35.33 லட்சமாக வளர்திருக்கும். இதில் 10 வருட மொத்த முதலீடில் கிடைத்த வருமானம் 15.65% CAGR. இதில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்தில் செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் மொத்த முதலீடு இப்போது கிட்டத்தட்ட ரூ.4.28 லட்சம் மதிப்புடையதாக இருக்கும்.
8. Franklin Build India Fund
கடந்த 10 ஆண்டுகளில் SIP முதலீட்டில் கிடைத்த ஆண்டு சராசரி வருமானம் 20.60% CAGR. இந்த SIP வருமானத்தின் அடிப்படையில், ரூ. 10,000 மாதாந்திர SIP 10 ஆண்டுகளில் ரூ. 35.21 லட்சமாக மாறியிருக்கும். இதில் 10 வருட மொத்த முதலீட்டிற்கு கிடைத்த வருமானம்: 16.59% CAGR. அதாவது இந்தத் திட்டத்தில் செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மொத்த முதலீடு இப்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 4.64 லட்சமாக அதிகரித்திருக்கும்.
9. Nippon India Growth Fund
கடந்த 10 ஆண்டுகளில் SIP முதலீட்டில் கிடைத்த ஆண்டு சராசரி வருமானம் 20.38% CAGR. இந்த SIP வருமானத்தின் அடிப்படையில், ரூ. 10,000 மாதாந்திர SIP 10 ஆண்டுகளில் ரூ. 34.79 லட்சம் மதிப்புடையதாக இருக்கும். இதில் செய்யப்பட்ட 10 வருட மொத்த முதலீட்டிற்கு கிடைத்துள்ள வருமானம் 16.66% CAGR. அதாவது இந்தத் திட்டத்தில் செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் மொத்த முதலீடு 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 4.67 லட்சமாக அதிகரித்திருக்கும்.