
ஓய்வு காலத்தில் வழக்கமான ஓய்வூதியத்தை பெற தேசிய ஓய்வூதிய முறை (NPS) மற்றும் தபால் அலுவலக மூத்த குடிமக்கள் திட்டம் (SCSS) போன்ற பல திட்டங்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், NPS வருமானம் 10% என்ற அளவில் உள்ளது. SCSS தற்போது 8.2% வட்டியை வழங்குகிறது. பல வருடாந்திரத் திட்டங்கள் போன்ற பிற திட்டங்கள் வாழ்நாள் வருமானத்தை வழங்குகின்றன, ஆனால் வருமானம் 6-7% மட்டுமே. தங்கம், பங்குகள் அல்லது பரஸ்பர நிதிகளுடன் FD வருமானத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், 7-8% வருமானம் குறைவு எனலாம்.
வழக்கமான வருமானத்திற்கு உதவும் SIP + SWP திட்டம்
ஓய்வுக்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய, SIP + SWP திட்டம் உதவும். முதலில் சம்பாதிக்கும் போது தொடர்ந்து 25 முதல் 30 ஆண்டுகள் வரை மியூச்சுவல் ஃபண்ட் SIP மூலம் ஒரு நல்ல நிதியை உருவாக்க வேண்டும். பின்னர் முதலீட்டை நிறுத்தி விட்டு முறையான பணத்தைத் திரும்பப் பெறும் திட்டம் (SWP), மூலம் உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இருந்து, வழக்கமான வருமானத்திற்கு ஓய்வூதியத்தைப் போல பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் முதலீட்டிற்கான வருமானமும் ஒருபுறம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
மாத வருமானம் ரூ. 1 லட்சம் பெற உதவும் முதலீடு
உங்கள் வயது இப்போது 35 ஆண்டுகள் என வைத்துக் கொள்வோம், 60 வயதில் ஓய்வு பெற விரும்புகிறீர்கள் என்றும், ஓய்வு பெற்ற பிறகு மாதந்தோறும் ரூ. 1 லட்சம் வழக்கமான வருமானத்தை விரும்புகிறீர்கள் என்றும் வைத்துக்கொள்வோம். உங்களுக்கான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு உத்த இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும். முதலில் 25 ஆண்டுகள் SIP முதலீடு, பின்னர் ஓய்வுக்குப் பிறகு 15 ஆண்டுகளுக்கு SWP திட்டத்திலிருந்து பணத்தை எடுப்பது. இதன் மூலம், நீங்கள் 75 வயதை அடையும் வரை வழக்கமான மாத வருமானம் ரூ. 1 லட்சம் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
மாதம் ரூ.5,000 SIP முதலீடு மூலம் ரூ.1 கோடி கார்பஸ்
இந்த முதலீட்டு உத்தியின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், அசல் முதலீட்டின் ஒரு பகுதியை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும், அதாவது உங்கள் SWP திட்டத்தில் முதலீட்டை நிறுத்தினாலும், எடுக்கப்பட்டாத உங்கள் மூலதனத்தின் ஒரு பகுதிக்கு வருமானம் கிடைக்கும் . உங்களுக்கு 35 வயது என்றும், 60 வயதில் ஓய்வு பெற விரும்புகிறீர்கள் என்றும் வைத்துக்கொள்வோம். நீங்கள் ரூ. 5,000 SIP திட்டத்தில் தொடங்கினால் ஓய்வுக்குப் பிறகு ரூ.1 கோடி கார்பஸ் உடன் ஒரு மாதத்திற்கு ரூ. 1 லட்சம் சம்பாதிக்கலாம்.
SWP திட்டத்தில் ரூ.1 கோடி முதலீடு
முதல் 25 ஆண்டுகளுக்கு 13% CAGR உடன் மாதம் ரூ.5,000 SIP முதலீடு மூலம் ரூ.1 கோடி கார்பஸ் உருவாக்கலாம். 25 ஆண்டுகளில் உங்கள் மொத்த முதலீடு ரூ.15 லட்சமாக இருக்கும். இதில், உங்களுக்கு சுமார் ரூ.85 லட்சம் வருமானம் கிடைக்கும், மேலும் உங்கள் நிதி ரூ.1 கோடியை எட்டும். பின்னர் SWP திட்டத்தில் ரூ.1 கோடியை முதலீடு செய்வதன் மூலம் மாதத்திற்கு ரூ.1 லட்சம் வருமானம் பெறுங்கள்.
வெவ்வேறு பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்தல்
இப்போது நீங்கள் இந்த ரூ.1 கோடியை 15 ஆண்டுகளுக்கு வெவ்வேறு நிதிகளில் (largecap, Midcap, ELSS அல்லது large & midcap போன்றவை) நல்ல திட்டமிடலுடன் முதலீடு செய்து SWP மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் திரும்பப் பெறத் தொடங்கலாம்.
சராசரி ஆண்டு வருமானம்
மேலே குறிப்பிடப்பட்ட நிதிகளில் முதலீடு செய்வதில் உங்களுக்கு 10% சராசரி ஆண்டு வருமானம் கிடைக்கும் என்று வைத்து 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் திரும்பப் பெறுகிறீர்கள். அதாவது நீங்கள் மொத்தம் ரூ.1.8 கோடி திரும்பப் பெறுகிறீர்கள். அப்படியிருந்தும் உங்கள் மொத்த நிதி மதிப்பு ரூ.2.07 கோடியாக இருக்கும். அதில் ரூ.1.07 கோடி வெறும் வட்டி வருமானம் மட்டுமே. அதாவது, 15 ஆண்டுகளுக்கு மாதத்திற்கு ரூ.1 லட்சம் வருமானம் எடுத்த பிறகும், உங்களிடம் சுமார் ரூ.27.5 லட்சம் உள்ளது. அதாவது உங்கள் அசல் தொகையில் 25%க்கும் அதிகமான தொகை SWP முதலீட்டில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தமாக திரும்பப் பெறக் கிடைக்கிறது.