
Systematic Investment Plans (SIP) வழியே Mutual Fund -ன் மாதாந்திர வரவு ஏப்ரல் மாதத்தில் 2.72 சதவீதம் அதிகரித்து ரூ.26,632 கோடியாக உயர்ந்துள்ளது என்று AMFI இன் சமீபத்திய தரவுகள் காட்டுகின்றது.
முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) வரவுகள், மார்ச் மாதத்தில் ₹25,926 கோடியிலிருந்து, ஏப்ரல் மாதத்தில் இது வரை இல்லாத அளவுக்கு ₹26,632 கோடியாக உயர்ந்துள்ளது என்று இந்திய Mutual Fund சங்கம் (AMFI) தரவுகள் தெரிவித்துள்ளது.
SIP பங்களிப்புகள் ஏப்ரல் மாதத்தில் ₹26,632 கோடியாக உயர்ந்தது, இது இப்போது மொத்தம் 8.38 கோடியாக உள்ளது. இந்த தொடர்ச்சியான வளர்ச்சி, நீண்ட கால சேமிப்பிற்கான ஒரு ஒழுக்கமான மற்றும் பயனுள்ள கருவியாக Mutual Fund – க்கான விருப்பத்தை அதிகரிக்கிறது.
மேலும், SIPகளின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்துக்கள் (AUM) ஏப்ரல் மாதத்தில் ரூ.13.90 லட்சம் கோடியாக உயர்ந்தன, இது இந்திய Mutual Fund துறையின் மொத்த AUM இல் சுமார் 20 சதவீதமாகும்.
ஒட்டுமொத்தமாக, Mutual Fund துறை ஏப்ரல் மாதத்தில் ₹2.77 லட்சம் கோடி நிகர வருவாயைப் பதிவு செய்தது. குறிப்பாக SIP முதலீடுகள், கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளன. பிப்ரவரி 2020 இல் ₹8,513 கோடியிலிருந்து பிப்ரவரி 2025 இல் கிட்டத்தட்ட ₹26,000 கோடியாக அவற்றின் மாதாந்திர பங்களிப்புகள் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளன.
FY25 இல், மொத்த SIP வரவுகள் 45.24% அதிகரித்து ₹2.9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது, இது FY18 க்குப் பிறகு மிக விரைவான வருடாந்திர வளர்ச்சியைக் குறிக்கிறது, அப்போது அதிகரிப்பு 52.98% ஆக இருந்தது.