
Aggressive Hybrid Mutual Fund என்பது பெரும்பாலும் பங்குகளில் ( equity) முதலீடு செய்யும், ஆனால் ஒரு பகுதியை நிச்சய வருமானம் தரும் ( FD போன்ற) fixed instrument-களில் முதலீடு செய்யும் Mutual Fund வகையாகும். இதில் அதிகபட்சம் 75% stocks பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படும், மீதமுள்ள 25% stocks குறைந்த அபாயம் கொண்ட government Bond, treasury bills and money market etc… போன்ற finance instrument-ல் முதலீடு செய்யப்படுகிறது.
Aggressive Hybrid Fund -ன் நன்மைகள்:
அதிகபட்சம் 75% பங்குகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் உங்கள் பணத்திற்கு அதிக அளவில் growth பெரும் வாய்ப்புகள் கிடைக்கும். குறைந்தபட்சம் 25 சதவீதம் பங்கு FD மாதிரியான குறைந்த அபாயம் கொண்ட instrument-களில் முதலீடு செய்யப்படும். இது stock market குறையும் போது ஒரு பாதுகாப்பு அளிக்கிறது.
இந்த வகை fund-கள் குறைந்தது ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட முதலீடு காலத்திற்கு ஏற்றவை.
யார் முதலீடு செய்யலாம்?
இந்த fund வகை, மிதமான அபாயத்தை ஏற்கும் inverter களுக்கு ஏற்றது. பங்கு சந்தையில் நேரடி முதலீடு செய்ய தயார் இல்லை என்றாலும், அதன் வளர்ச்சியை அனுபவிக்க விரும்பினால் இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். குறைந்தது ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட முதலீட்டு நோக்கம் இருந்தால் இந்த வகை fund உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.
Aggressive Hybrid Fund என்பது பங்குச்சந்தை போல வளர்ச்சியையும் மற்றும் FD போன்ற பாதுகாப்பும் தேவையான முதலீட்டாளர்களுக்கான நல்ல விருப்பம். நீண்ட கால வளர்ச்சியை நாடும் முதலீடாளர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.