
Conservative Hybrid Mutual Fund என்பது ஒரு Mutual Fund வகையாகும். இது பெரும்பாலும் நிச்சய வருமானம் தரும் முதலீடுகளில் FD போன்ற Fixed Income Instrument-களில் முதலீடு செய்யும் ஃபண்ட் ஆகும். அதே நேரத்தில் சிறிய அளவிலான பங்குகள்(Stocks) Share Market-ல் முதலீடு செய்யப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான முறையில் கூடுதல் வருமானம் தேடும் முதலீட்டாளர்களுக்கான ஒரு நல்ல விருப்பம் ஆகும்.
இந்த வகை Fund-கள், Risk எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு ஏற்றவை. குறிப்பாக வங்கியில் Fixed Deposit-ஐ விட சிறிது அதிக வருமானம் தேடுபவர்களுக்கு ஏற்றவை. ஆனால் Share Market-யில் ஆழ்ந்த ஈடுபாட்டை தவிர்க்க விரும்புவர்கள் இதை தேர்வு செய்யலாம். குறைந்தது 2 முதல் 3 வருடங்கள் முதலீட்டு நோக்கம் உள்ளவர்களுக்கு இது சிறந்ததாக அமையும்.
இந்த பண்டுகளில் குறைந்தது 75% Money Market Instruments-ல் முதலீடு செய்யப்படும். இதன் மூலம் நிலையான வருமானம்(Consistent Income) பெற முடியும். மீதமுள்ள அதிகபட்சம் 25% பங்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும். இது பங்குகள் உயரும் போது உங்கள் முதலீட்டில் சிறிய அளவில் Growth தரும்.
Conservative Hybrid Mutual Fund என்பது பாதுகாப்பான வருமானத்துடன் கூடிய சிறிய வளர்ச்சியை தரக்கூடிய ஒரு fund. இது Bank FD-யை விட சிறந்த Return தரும் தருவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. அதுவும் குறைந்த ஆபாயத்தில் நீண்ட காலத்திற்கான நிதி திட்டங்களில் இதனை பயன்படுத்துவது நல்ல தேர்வாக இருக்கலாம்.