
ஓய்வு காலத்தில் வழக்கமான வருமானத்தை பெற Mutual fund முதலீடுகள் உதவும். இதன் மூலம் முதலீட்டாளர்கள் ஓய்வூதியத்திற்கான ஒரு கார்பஸை உருவாக்குவதோடு, அதிலிருந்து வழக்கமான வருமானத்தை பெற அதனை SWP திட்டமாக மாற்றிக் கொள்ளலாம்.
ஓய்வு காலத்தில் நிதி சுதந்திரத்துடன் இருக்கவும், வழக்கமான வருமானத்தை பெற Mutual fund முதலீடுகள் உதவும். Mutual fund -கள் மூலம் முதலீட்டாளர்கள் ஓய்வூதியத்திற்கான ஒரு கார்பஸை உருவாக்குவதோடு, தொடர் முதலீட்டிற்கு பின், அதிலிருந்து வழக்கமான வருமானத்தை பெற அதனை SWP திட்டமாக மாற்றிக் கொள்ளலாம்.
உங்களுக்கு ஓய்வு பெற 20 அல்லது 25 ஆண்டுகள் இருக்கும் நிலையில், மாத 1 லட்சம் ரூபாய் தேவைப்படும் என வைத்துக் கொள்வோம். இதனை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.தனியார் துறையில் பணிபுரியும் 32 வயதுக்கு மேற்பட்ட ராகுல் வேலைக்குச் சேர்ந்து கிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டன, ஆனால் இதுவரை ஓய்வுக்குப் பிறகு வருமானம் அல்லது ஓய்வூதியம் பற்றி அவர் சிந்திக்கவில்லை. அதேசமயம் 55 வயதிற்குள் ஓய்வு பெறுவதே அவரது திட்டம். அவர் ஒரு நிதி ஆலோசகரை அணுகி முறையான பணத்தைத் திரும்பப் பெறும் திட்டம் (SWP) பற்றி அறிந்து கொண்டார்.
SWP திட்டத்திற்கு முதலில் அதற்கான கார்பஸை உருவாக்க வேண்டும். SIP என்பது முறையான முதலீட்டு திட்டம். அதற்கு முற்றிலும் மாறானது முறையாக பணத்தைத் திரும்பப் பெறும் திட்டம் (SWP). இதற்கு நீங்கள் முதலில் ஒரு பெரிய அளவில் கார்பஸை உருவாக்க வேண்டும். இங்கு, சிறந்த வருமானம் தரும் Mutual fund திட்டங்கள் உதவக்கூடும். ராகுலுக்கு ஓய்வு பெற இன்னும் 21 ஆண்டுகள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், நிதியைத் உருவாக்க அவருக்கு இன்னும் 21 ஆண்டுகள் உள்ளன. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் FD -யை போல மொத்த தொகை முதலீடு செய்யலாம் அல்லது SIP முறையில் RD -யைப் போல மாதா மாதம் முதலீடு செய்யலாம். உங்களுக்கு ஏற்ற எந்தவொரு ஆப்ஷனையயும் நீங்கள் பின்பற்றலாம்.
சுமார் 15 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை ஆண்டு வருமானத்தை அளித்த பல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன. 21 ஆண்டு கால நீண்ட முதலீட்டில் லட்சம் கோடிகளாகி விடும். கூட்டு வட்டி வருமானத்தின் பலன் கிடைப்பதால், எளிதில் பணம் பன்மடங்காவதே இதற்கு காரணம். அத்தகைய சூழ்நிலையில், ரூ.5 லட்சத்தை 21 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து, மதிப்பிடப்பட்ட வருமானம் ஆண்டுக்கு 15 சதவீதமாகக் கருதினால், 21 ஆண்டுகளில் ரூ.94,00,000 நிதியை உருவாக்க முடியும்.
மியூச்சுவல் ஃபண்ட் LUMPSUM கால்குலேட்டர்
மொத்த முதலீடு: ரூ. 5,00,000
முதலீட்டு காலம்: 21 ஆண்டுகள்
21 வருட மொத்தத் தொகையில் மதிப்பிடப்பட்ட வருமானம்: ஆண்டுக்கு 15%.
21 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டின் மதிப்பு: ரூ. 94,00,000
SWP கால்குலேட்டர்
மொத்த முதலீடு: ரூ. 94,00,000
முதலீட்டு காலம்: 20 ஆண்டுகள்
மதிப்பிடப்பட்ட வருமானம்: ஆண்டுக்கு 8%.
மாதத்திற்கு திரும்பப் பெறும் தொகை: ரூ. 1 லட்சம்
20 ஆண்டுகளில் திரும்பப் பெறும் தொகை: ரூ. 1,45,00,000
உங்கள் முதலீட்டின் மீதான வருமானம்: ரூ. 51,00,747
(SWP) முறையான பணத்தைத் திரும்பப் பெறும் திட்டம் என்றால் என்ன?
SWP அல்லது முறையான பணத்தைத் திரும்பப் பெறும் திட்டம் என்பது உங்கள் முதலீடுகளிலிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பணத்தை எடுப்பதற்கான ஒரு ஒழுக்கமான வழியாகும். இந்த விருப்பம் ஓய்வு பெறும்போது அல்லது வேலையில் இருந்து ஓய்வு எடுக்கும் போது சிறப்பாகச் செயல்படும். இதற்காக, உங்கள் மியூச்சுவல் ஃபண்டில் மாதத்தின் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபிட் செய்யுமாறு நீங்கள் அறிவுறுத்த வேண்டும், அப்போது பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். திரும்பப் பெற்ற பிறகு, முதலீட்டில் மீதமுள்ள நிதியிலிருந்தும் தொடர்ந்து வருமானத்தைப் பெறுவீர்கள். இன்னும் அதிக காலம் வருமானம் பெற ஆரம்பத்திலேயே முதலீட்டை அதிகரிக்கலாம்.