
பெரும்பாலான மக்கள் டெர்ம் இன்சூரன்ஸில் முதலீடு செய்யும் பொழுது முதலில் கேட்கும் கேள்வி இதுவாகும்?
இதிலிருந்து ரிட்டன்ஸ் வருமா வராதா அப்படி வந்தால் எவ்வளவு ரிட்டன்ஸ் வரும் எவ்வளவு வருடம் கழித்து ரிட்டன்ஸ் வரும் என்பது தான்.
இன்சூரன்ஸ் என்பது மன அமைதிக்காகவே தவிர ரிட்டன்ஸ்காக கிடையாது. காப்பீட்டு நிறுவனத்தி துறையிலேயே மிகவும் மலிவான திட்டம் எதுவென்றால் டேர்ம் இன்சூரன்ஸ் ஆகும்.
உதாரணத்திற்கு 1 கோடி முதல் 2 கோடி வரையிலான கவரேஜ் வெறும் 10000 அல்லது 20000 ரூபாய் பிரீமியம் ஆண்டிற்கு ஒரு முறை செலுத்தினாலே இந்த கவரேஜ் பெற இயலும்.
இந்த டெர்ம் இன்சூரன்ஸ் எடுப்பதனால் நமது குடும்பம் பாதுகாப்பாகவும் குடும்பத்தின் Breadwinner இல்லாத போதும் இக்கட்டான பொருளாதார சூழ்நிலைகளில் இது உதவிகரமாக இருக்கிறது.
பெரும்பாலான மக்கள் கேட்கப்பட்டு வரும் கேள்வி டெர்ம் இன்சூரன்ஸ் எடுப்பதற்கு விதிமுறைகள் உள்ளதா?
டேர்ம் இன்சூரன்ஸ் எடுப்பதற்கு கட்டாயம் 18 வயது பூர்த்தி அடைய வேண்டும். டேர்ம் இன்சூரன்ஸ் விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் Bank statement,Pay Slip,ITR returns. இரண்டரை லட்சம் முதல் மூன்று லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் இதை விண்ணப்பிக்கலாம்.
ஒரு தனிநபர் மற்றொரு பிரீமியத்தை வெவ்வேறு காப்பீட்டு நிறுவனங்களில் வாங்கிக் கொள்ள இயலும்.அதனை ஏற்கனவே பிரிமியம் செலுத்திய நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும்.