
தாங்கள் KYC ஐ மீண்டும் சமர்ப்பிக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வதற்கு ஒருவர் தங்களுடைய KYC Status என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
உங்களுடைய Status -ஐ சரி பார்ப்பதற்கு நீங்கள் பெரும்பாலான நபர்கள் பயன்படுத்தக்கூடிய CVL, KYC Registration Agency (KRA) ஐ பயன்படுத்தலாம். இல்லையெனில் NDML KRA, CAMS KRA அல்லது Karvy KRA-ஐ முயற்சி செய்து பார்க்கலாம்.
அதே நேரத்தில் Mobile நம்பர் மற்றும் Mail-ID போன்ற உங்களுடைய தொடர்பு விவரங்கள் ஏதேனும் ஒரு KYC Registration Agency -கள் அல்லது KRAகள் மூலமாக சரிபார்க்கப்பட்டதா என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
உங்களுடைய KYC ஐ Update செய்தல் :
உங்களின் KYC Status என்ன என்பதை தெரிந்து கொண்ட பிறகு ஏதேனும் ஒரு Fund house website மூலமாக அதனை நீங்கள் Online -ல் Update செய்யலாம் அல்லது Fund house -களில் ஒருவரிடம் நேரடியாக சென்று KYC form -ஐ சமர்ப்பிக்கலாம். நீங்கள் Update செய்த KYC அனைத்து Fund house -களிலும் இருக்கக்கூடிய உங்களுடைய எல்லா Mutual fund முதலீடுகளிலும் பிரதிபலிக்கும்.
நீங்கள் ஏற்கனவே Edelweiss MF முதலீட்டாளராக இருந்தால் உங்களுடைய Account -ல் Login செய்ய வேண்டும். அங்கு உங்களுடைய Profile section கீழ் ‘registered’ அல்லது ‘on hold’ என்று இருந்தால் KYC ஐ Update செய்வது எப்படி என்பதற்கான வழிகாட்டுதலை பெறுவீர்கள். இதற்கு நீங்கள் உங்களுடைய DigiLocker Account -ல் இருந்து M-Aadhar அல்லது E-Aadhar -ஐ Upload செய்ய வேண்டும். இந்த தகவல் பின்னர் UIDAI மூலமாக சரி பார்க்கப்பட்டு உங்களின் KYC Status update செய்யப்படும்.
ஒருவேளை உங்களுடைய KYC Status ‘registered’ என்றிருந்தால் ஏற்கனவே இருக்கக்கூடிய Fund house -களில் நீங்கள் தொடரலாம். ஆனால் மீண்டும் KYC சமர்ப்பிக்கும் வரை புதிய முதலீடுகளை செய்ய முடியாது.
நேரடியாக செல்ல நினைப்பவர்கள் ஆதார் அட்டையை சமர்ப்பிக்கும் பொழுது அதில் இருக்கக்கூடிய QR கோடு காலப்போக்கில் அழிந்து இருப்பதற்கு வாய்ப்புள்ளது. இதனால் உங்களுடைய KYC Update ஆகாமல் போகலாம். எனவே KYC யை மீண்டும் Update செய்வதற்கு Online சிறந்த தளமாக அமைகிறது.
NRIகள் எதிர்கொள்ளும் சிரமம் :
இந்திய முதலீட்டாளர்களுடன் ஒப்பிடுகையில் NRIகளுக்கு இது சற்று கடினமான சூழ்நிலையாக அமைகிறது. நீங்கள் இந்தியாவில் வசிக்காத ஒரு இந்தியராக இருந்து, உங்களிடம் இந்தியா அல்லாத ஒரு Mobile நம்பர் இருக்கும் பட்சத்தில், உங்களுடைய KYC ஐ சரி பார்ப்பதற்கு உங்கள் Mobile நம்பருக்கு OTP ஐ உங்களால் பெற முடியாது. இதன் விளைவாக உங்களுடைய KYC Status ‘registered’ (மற்றும் not ‘validated’) என்று காண்பிக்கப்படும்.