
SIPஆக இருந்தாலும் சரி அல்லது Mutual fund -ல் ஒரு பெரிய தொகையை மொத்தமாக முதலீடு செய்வதாக இருந்தாலும் சரி, வயது மற்றும் நேரம் ஒரு பொருட்டல்ல. உங்களுடைய முதலீட்டை நீங்கள் எந்த வயதில் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். Mutual fund -களில் நீங்கள் இரண்டு வழிகளில் முதலீடு செய்யலாம். ஒன்று SIP, மற்றொன்று ஒரு பெரிய அளவிலான முதலீடு(Lumpsum).
Lumpsum முதலீட்டில் நீங்கள் Mutual fund -களில் மொத்தமாக ஒரு பெரிய தொகையை முதலீடு செய்வீர்கள். இதுவே SIP என்று வரும்போது சிறிய அளவிலான முதலீடுகளை அவ்வப்போது செய்வீர்கள்.
கூட்டு வட்டி(compound interest)என்றால் என்ன?
இதற்கு முன்பு நீங்கள் பெற்ற வட்டித் தொகை அனைத்தையும் சேர்த்து வட்டிக்கு வட்டி வழங்கப்படும். இதற்கான ஒரு சிறிய கணக்கீட்டைப் பார்க்கலாம். அதாவது ஆரம்ப கால தொகையாக 100 ரூபாய்க்கு ஓராண்டுக்கு 5% வட்டி எனும்போது, ஒரு வருடம் கழித்து உங்களுக்கு 105 ரூபாய் கிடைக்கும். இரண்டாவது வருடத்தின் முடிவில் உங்களுடைய மொத்த வரவு 110.25ஆக இருக்கும்.
நீண்ட கால பலன்கள்:
பெரிய அளவிலான முதலீடுகள் என்பது நீண்ட கால பொருளாதார இலக்குகளுக்கு ஏற்றதாக அமைகிறது. ஏனெனில், நாளடைவில் இது கூட்டு வட்டி முறையில் உங்களுக்கு பெரிய அளவிலான Return -னை பெற்றுத் தரும்.
பெரிய அளவிலான தொகையில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்குமா?
பெரிய அளவிலான தொகை உங்களுக்கு அதிக வட்டி பணத்தை நிச்சயமாக கொடுக்கும். ஆனால், இதில் அதிக Risk உள்ளது. சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் எனக்கு எந்த ஒரு பயமும் இல்லை என்று நினைக்கும் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். இல்லையென்றால் SIP ஒரு சிறந்த choice -ஆக அமைகிறது.
Lumpsum Investment -ஐ SIP உடன் ஒப்பிடும்போது எப்படி வேறுபடுகிறது?
SIP-களை பொறுத்தவரை தவணைகளில் நீங்கள் உங்களுடைய பணத்தை முதலீடு செய்வீர்கள். எனவே, முதன்முதலாக முதலீடுகளில் ஈடுபடுபவர்களுக்கு மற்றும் சந்தை பற்றிய முழுமையான விவரங்கள் தெரியாதவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். பெரிய அளவிலான முதலீடு என்பது ஒவ்வொரு வருடமும் உங்களுடையReturn -னை அதிகரிக்கக்கூடிய ஒரு முதலீட்டுத் திட்டமாக அமைகிறது.
Lumpsum முதலீடு மூலமாக 4 கோடி ரூபாய் தொகையை எப்படி உருவாக்குவது?
உங்களுடைய 40வது வயதில் இந்த முதலீட்டை நீங்கள் ஆரம்பிப்பதாக வைத்துக் கொள்வோம். 20 வருடங்களுக்கு Mutual fund -ல் நீங்கள் 41,50,000 ரூபாய் முதலீடு செய்தால் இந்த இலக்கை உங்களால் அடைய முடியும்.
ஆண்டுவாரியான ரிட்டன்:
இதற்கான ஆண்டுவாரியான ரிட்டன் 12 சதவீதமாக கணக்கிடப்படுகிறது. முதலீட்டு தொகை: 41,50,000 ரூபாய் Approximate Return: 3,58,82,116 ரூபாய் Maturity Amount: 4,00,32,116 ரூபாய்
பெரிய அளவிலான முதலீடுகளுக்கு சிறந்த Mutual fund -களை தேர்வு செய்வது எப்படி?: ஆரம்பத்திலேயே நீங்கள் குறுகிய கால இலக்கில் முதலீடு செய்யப் போகிறீர்களா? அல்லது நீண்ட கால இலக்குகளுக்காக முதலீடு செய்யப் போகிறீர்களா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். Debt and hybrid funds குறுகிய கால இலக்குகளுக்கும், equity funds -கள் நீண்ட கால இலக்குகளுக்கும் ஏற்றதாக இருக்கும்.
நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகளின் செயல்திறனை ஆய்வு செய்தல்:
முதலீடு செய்வதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட ஃபண்ட் குறித்த முந்தைய செயல்திறன்களைப் பற்றி நன்கு ஆய்வு செய்து அதன் பிறகு முதலீட்டில் ஈடுபடுவது அவசியம். ஒரு சமநிலையான அணுகுமுறையை பராமரிப்பதற்கு உங்களுடைய பணத்தை ஒரே ஃபண்டில் முதலீடு செய்யாமல் பல்வேறு ஃபண்டுகளில் முதலீடு செய்வது சிறந்த யோசனையாக இருக்கும்.
இந்தப் பதிவு என்பது ஒரு முதலீட்டு ஆலோசனை அல்ல. மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. எனவே, எந்த ஒரு பொருளாதார சம்பந்தப்பட்ட முடிவை எடுப்பதற்கு முன்பும் முதலீட்டு நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறுவது அவசியம்.