
உங்கள் குடும்பத்தினருக்கு உங்கள் மதிப்பு தெரியும், ஆனால் அதை நீங்கள் எப்போதாவது உண்மையாக உணர்ந்திருக்கிறீர்களா?குறைந்தபட்சம் 2025 ஆம் ஆண்டிலாவது உங்களுக்கான திட்டமிடலைத் தொடங்குங்கள்.உயிரோடு இருக்கும்போதும் சரி, உயிரிழந்த பிறகும் சரி… இப்போது இருப்பதை போலவே, நீங்கள் என்றும் நாயகனாகவே இருங்கள்.
ஊழியர்கள் பொதுவாக தனிப்பட்ட காப்பீடு குறித்து அதிகமாக கவலைப்படுவதில்லை.நிறுவனம் வழங்கும் சில சிறிய காப்பீட்டுத் தொகையை வைத்து சமாளித்துக் கொள்ளும் அவர்கள், ஆயுள் காப்பீடு(Term Insurance ),மருத்துவக் காப்பீடு(Health Insurance) போன்ற முக்கியமான ஒன்றைப் பற்றி கவலைப்படுவதில்லை.விபத்துக் காப்பீடு, தீவிர சிகிச்சை மற்றும் மகப்பேறு காப்பீடு போன்றவற்றைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
அதனால் நீங்கள் திட்டமிட வேண்டிய காப்பீட்டுக் கொள்கைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
மருத்துவக் காப்பீடு(Health Insurance)
மருத்துவக் காப்பீடு இல்லையென்றால், நீங்கள் பல ஆண்டுகளாக சேர்த்த அனைத்து சொத்துக்களும் சில நாட்களுக்குள் கரைந்துவிடும், கவனமாக இருங்கள்.
இந்தியாவில் மருத்துவ செலவுகள் வருடத்துக்கு சராசரியாக 14 சதவிகிதம் உயருகின்றன என்று, 2024ம் ஆண்டில் வெளியான வாட்சன் குளோபல் மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.
அதாவது, இன்று ரூ.10,000 செலவாகும் ஒரு சிகிச்சைக்கு, அடுத்த வருடம் ரூ.11,400 செலவாகும் என்பது தான் அதன் பொருள்.இந்தக் கணக்கீட்டின் அடிப்படையில், சிகிச்சைக்கான செலவுகள் எவ்வளவு அதிகரிக்கப் போகின்றன என்பதற்கான விளக்கத்தைத் தனியாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
மருத்துவத் துறையில் புதிய தொழில்நுட்பங்களால் மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பது ஒரு நல்ல முன்னேற்றம் தான். இன்று நம்மில் பலர் 80 வயதுக்கும் மேல் வாழ்கிறோம். ஆயுட்காலத்தை அதிகரிப்பது நல்ல விஷயம் தான் என்றாலும், அதற்கேற்ப நாம் திட்டமிடவில்லை என்றால் அது எதிர்காலத்தில் சவாலாக மாறிவிடும்.
என்ன செய்ய வேண்டும் ?
குறைந்தபட்சம் ரூ.10-15 லட்சம் மதிப்புள்ள Family Health Insurance திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.மகப்பேறு, தீவிர நோய், வெளி நோயாளி சிகிச்சை போன்ற கூடுதல் காப்பீட்டுத் திட்டங்களையும் பரிசீலியுங்கள்.வாழ்நாள் காப்பீட்டுத் திட்டம் மற்றும் மருத்துவமனையில் தங்குவதற்கு செலுத்த வேண்டிய தொகைக்கு உச்சவரம்பு இல்லாத Health Insurance போன்றவற்றைத் தேர்ந்தெடுங்கள்.
கூடுதல் குறிப்பு – ரூ.5 லட்சம் தள்ளுபடி உடன் ரூ.20 லட்சம் மதிப்புள்ள Super Top -Up Insurance -ஐ வாங்குங்கள். இதற்கு உங்களுக்கு ரூ.2500-4000 வரை செலவாகும்.
ஆயுள் காப்பீடு (Term Insurance)
உங்கள் முழு குடும்பமும் உங்களைச் சார்ந்திருந்தால், நீங்கள் நிச்சயமாக கால ஆயுள் காப்பீட்டை (Term Insurance) எடுக்க வேண்டும். இதுதான் தற்போது சந்தையில் உள்ள மிகவும் மலிவான காப்பீட்டுத் திட்டமாகும்.
உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள் என்ற எண்ணத்தில் யூலிப் (ULIP: Unit Linked Insurance Plans- யூலிப் திட்டம் என்பது முதலீடு மற்றும் காப்பீடு என இரண்டு அம்சங்களை ஒன்றாக கொண்ட ஒரு முதலீட்டு அம்சம்) மற்றும் பணத்தைத் திரும்பப் பெறும் திட்டங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.
மலிவு விலையில் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க இந்த திட்டம் மட்டுமே ஒரே வழி.