
இங்கே உங்கள் PAN எண்ணைப் பயன்படுத்தி அனைத்து மியூச்சுவல் பண்ட் முதலீடுகளையும் கண்காணிக்க முடியும்.
CAS அறிக்கைகளை விரைவாக பெறலாம்
2025 மே 14 முதல், SEBI (செபி) புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது:
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் மற்றும் பதிவு முகவர்கள் (RTAs) மாத முடிவிலிருந்து 5 நாட்களில் PAN அடிப்படையிலான தகவல்களை அளிக்க வேண்டும்.
அதன் பிறகு Depositories – கள் மின்-அஞ்சல் மூலம் CAS ஐ 12வது தேதிக்குள் மற்றும் hard copy -ஐ 15வது தேதிக்குள் அனுப்ப வேண்டும். இது உங்கள் முழுமையான முதலீட்டு விபரங்களை விரைவாக பெற உதவும்.
MITRA என்ற புதிய தளத்தின் அறிமுகம்
SEBI, MITRA எனும் புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது (CAMS மற்றும் KFintech இணைந்து இயக்க படுகிறது). இது மூடப்பட்டுள்ள அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாத fund folios -களை மீட்க உதவுகிறது. இதில் உங்கள் PAN எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி பழைய முதலீடுகளை தேடலாம்.
PAN தொடர்பான பிழைகள் சரி செய்ய
பல்வேறு பண்ட் ஹவுஸ்களில் நீங்கள் முதலீடு செய்திருந்தாலும், சிலவற்றில் காணாமல்போகலாம் – காரணம்:
தவறான PAN எண்
KYC பதிவில் பிழை
Joint qualifying person’s PAN பயன்படுத்தப்படுதல்
இதனை சரி செய்ய, CAMS அல்லது KFintech தளத்தில் உங்கள் KYC மற்றும் PAN விவரங்களை புதுப்பிக்கலாம்.
சுருக்கமாக சொல்ல போனால்
CAS (e‑CAS) எதற்ககாக பயன்படுத்த படுகிறது என்றால் உங்கள் PAN-இல் இணைக்கப்பட்ட அனைத்து முதலீடுகளையும் காண உதவுகிறது
MITRA எதற்ககாக பயன்படுத்த படுகிறது என்றால் பழைய/செயலற்ற பண்ட் ஃபோலியோக்களை மீட்க உதவுகிறது
PAN/KYC புதுப்பிப்பதன் மூலம் அனைத்து முதலீடுகளையும் ஒரே அறிக்கையில் பெற முடியும்.