
2025-இல் முதல் 6 மாதங்களில், வெள்ளி விலை 25% உயர்ந்துள்ளது. இது தங்கத்தின் 26% உயர்வை நெருங்கியதாக உள்ளது. Exchange-Traded Products (ETPs) மூலமாக நிறைய முதலீட்டாளர்கள் வெள்ளியில் முதலீடு செய்தனர். 2025-இன் நடுவே, ETP-களில் 95 மில்லியன் அவுன்ஸ் வெள்ளி சேர்க்கப்பட்டது – இது 2024-ன் முழு தொகையைவிட அதிகம். 1.13 பில்லியன் அவுன்ஸ் வெள்ளி ETP-களில் வைத்திருப்பதாகவும், அதன் மதிப்பு $40 பில்லியன்-ஐ கடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
CME Exchange-இல், வெள்ளி futures வாங்கும் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 163% உயர்ந்துள்ளது. ஐரோப்பா மற்றும் இந்தியாவில் வெள்ளிக்கு நல்ல தேவை இருந்தது. அமெரிக்காவில், வெள்ளி தேவை 30% குறைந்தது – பலர் விலையுயர்வை பயன்படுத்தி லாபம் பெற்றனர்.