
இந்தியாவின் General insurance (non-life) sector ஜூன் 2025-இல் 5.16% வளர்ச்சி பெற்றது. மொத்தமாக ₹23,422 கோடி ப்ரீமியம் வசூலிக்கப்பட்டது, இது கடந்த ஆண்டு ஜூனில் இருந்த ₹22,272 கோடி-ஐ விட அதிகம்.
ஏப்ரல் முதல் ஜூன் 2025 வரை, மூன்று மாதங்களில் மொத்த ப்ரீமியம் ₹79,306 கோடி ஆக இருந்தது. இது கடந்த ஆண்டின் அதே நேரத்தோடு ஒப்பிடும் போது 8.85% அதிகம். இந்தத் தரவுகளை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) வெளியிட்டது.
1.தனியார் Insurance company-களுக்கு சிக்கல்கள்
சில தனியார் நிறுவனங்கள் குறைவான வளர்ச்சியை சந்தித்தன.
ICICI Lombard: ஜூனில் ப்ரீமியம் 10.36% குறைந்து ₹1,987 கோடி ஆகியது. ஆனால், மூன்று மாதங்களுக்கு 0.61% வளர்ச்சி இருந்தது.
HDFC ERGO: ஜூனில் 17.4% வீழ்ச்சி மற்றும் காலாண்டில் 8.8% குறைவு. Future Generali and Cholamandalam MS ஆகிய நிறுவனங்களின் ப்ரீமியம் முறையே 20.1% மற்றும் 8.1% குறைந்தது.
2.Government insurers சிறப்பாக செயல்பட்டன
அரசு நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களைவிட சிறப்பாக செயல்பட்டன.
New India Assurance: ஜூனில் ப்ரீமியம் 10.68% உயர்ந்து ₹3,328 கோடி மற்றும் காலாண்டில் 15.27% வளர்ச்சி அடைந்தது.
Oriental Insurance and United India Insurance: ஜூனில் முறையே 13.5% மற்றும் 11.4% வளர்ச்சி அடைந்தது.
3.சில private insurers grew better
சில தனியார் நிறுவனங்கள் எதிர்மறையான சந்தை நிலையை மீறின:
Navi General Insurance: 30.6% வளர்ச்சி, ₹346 கோடி ப்ரீமியம்.
Aditya Birla Health Insurance: 26.5% உயர்வு.
SBI General Insurance: ஜூனில் 8.27%, காலாண்டில் 21.53% வளர்ச்சி அடைந்துள்ளது.
4. Health Insurance steady growth
Independent health insurers சீராக வளர்ந்தன.
Star Health: ஜூனில் 2.77%, காலாண்டில் 3.5% வளர்ச்சி.
Niva Bhupa: 15.5% வளர்ச்சி.
Aditya Birla Health and Care Health: எவை இரண்டும் double-digit growth -ஐ கண்டன.
மொத்த health insurance sector ஜூனில் 10.42%, காலாண்டில் 9.99% வளர்ந்து ₹9,151 கோடி ப்ரீமியம் வசூலித்தது.
5.New premium calculation system
அக்டோபர் 2024 முதல் IRDAI புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. நீண்டகாலக் காப்பீட்டுகளின் ப்ரீமியம் தற்போது மாத/காலாண்டு புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படுவதில்லை. இதனால், தற்போதைய மற்றும் கடந்த ஆண்டின் தரவுகளை நேரடியாக ஒப்பிட முடியாமல் இருக்கிறது.