
1.Life Insurance Mistakes
*ஒவ்வொரு ஆண்டும் நான் கட்டும் premium வீணாகிறது:
பலர் “எனக்கு எதுவும் நடக்காது; உயிர் காப்பீடு எதற்கு?” என நினைத்து,term insurance -ஸை வாங்க மறுக்கிறார்கள். ஆனால் இதே அவர்கள் தங்களது வண்டியை காப்பீடு செய்வதில் தயங்க மாட்டார்கள்.
*Buy return of premium insurance வாங்குதல்:
பிரீமியம் வீணாகிவிடும் என்று நினைத்து, சிலர் “பிரீமியம் திருப்பித் தரப்படும்” இன்சூரன்ஸை தேர்வுசெய்கிறார்கள். ஆனால் இது மிகவும் விலை உயர்ந்தது. அதிலும் திரும்ப கிடைக்கும் தொகை inflation (விலை உயர்வு) காரணமாக 25-30 ஆண்டுகளுக்குப் பிறகு மதிப்பில்லாததாக மாறும்.
2.Health insurance mistakes
*எனக்கு நிறுவன காப்பீடு இருக்கிறது:
நீங்கள் பணியில் இருக்கும்போது மட்டும் நிறுவன காப்பீடு உங்களை பாதுகாக்கும். வேலை மாற்றம், இடைவேளைகள், ஓய்வு ஆகிய சமயங்களில் நீங்கள் பாதுகாப்பின்றி இருக்கலாம். ஓய்வுக்கு நெருங்கிய பிறகு தனிப்பட்ட காப்பீடு எடுப்பது ஆபத்தானது. ஏற்கனவே உள்ள நோய்களுக்கு கவரேஜ் இருக்காது. எனவே, தனிப்பட்ட Health insurance விரைவில் எடுப்பது நல்லது.
*I live abroad அங்கு நல்ல காப்பீடு இருக்கு:
பல NRI-கள் இந்தியாவில் தனி காப்பீடு எடுக்க மறுக்கிறார்கள். ஆனால் நீண்டகால சிகிச்சைக்கு இந்தியா வரும்போது, குடும்ப ஆதரவு கிடைக்கும் இடம் என்பதால்தான் அவர்கள் இங்கே சிகிச்சை தேர்வு செய்கிறார்கள். எனவே, வெளிநாட்டில் இருந்தாலும் இந்தியாவில் ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் வைத்திருப்பது நன்று.
*Buy online; அது easy மற்றும் Affordable:
ஒரு காப்பீட்டின் உண்மையான மதிப்பு claim செய்யும் நேரத்தில் தெரியும். அந்த சமயத்தில், ஒருவர் உதவாமல் (எஜென்ட்)claim செய்ய மிகவும் சிரமம் இருக்கும். பிரீமியம் குறைவாக இருந்தாலும், நம்பிக்கையுடன் உதவக்கூடிய agent இருக்க வேண்டும்.
*எந்த கம்பெனியிலிருந்து வாங்குறது முக்கியமில்லை; சுலபமா கிடைக்கிறதை வாங்கிக்கலாம்:
அனைத்து காப்பீட்டுகள் ஒரே மாதிரியானவை அல்ல. குறைந்த விலையில் கிடைக்கும் இன்சூரன்ஸ் அதிகமான feature-கள் இல்லாமலும், exclusions (தவிர்க்கப்பட்ட பிரிவுகள்) அதிகமுமாக இருக்கலாம். எனவே, விலை மட்டுமே பார்த்து காப்பீடு எடுக்க வேண்டாம்.
*எல்லா விவரங்களையும் சொல்ல வேண்டாம்:
காப்பீடு வாங்கும்போது உங்கள் உடல்நிலை பற்றிய உண்மையை முழுமையாக பகிர வேண்டும். உண்மை தகவல் மறைத்தால் claim செய்வதற்கான நேரத்தில் உங்கள் காப்பீடு நிராகரிக்கப்படலாம். உங்கள் application form -ஐ நீங்கள் தான் பூர்த்தி செய்ய வேண்டும்;
இன்று எதுவும் நடக்கவில்லையென்கிறதால், நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்றல்ல. காப்பீடு என்பது ஒரு பாதுகாப்பு. மேலே உள்ள தவறுகளை பார்த்து, உங்கள் காப்பீட்டுகள் நம்மை உண்மையாக பாதுகாக்கிறதா என்று பாருங்கள்.