
Term Insurance என்பது நீங்கள் இல்லாத போது உங்கள் குடும்பத்திற்கு நிதி ஆதரவு வழங்கும் பாதுகாப்பான திட்டமாகும். குடும்பத்திற்குத் தேவையான நேரத்தில் Claim தொகை வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இந்தக் காப்பீடு எடுக்கப்படுகிறது. ஆனால், சில நேரங்களில் Claim நிராகரிக்கப்படலாம்.
*மருத்துவ தகவல்களை மறைப்பது அல்லது தவறாக வழங்குவது:
பலர் காப்பீடு வாங்கும் போது, தங்களுக்குள்ள மருத்துவ பிரச்சனைகள் ( நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், புகைபிடிப்பு, மது அருந்தும் பழக்கம்) பற்றி கூறாமல் இருக்கிறார்கள். பின்னர் இந்தக் காரணங்கள் மரணத்திற்குக் காரணமாக இருந்தால், காப்பீட்டு நிறுவனம் Claim -யை நிராகரிக்கலாம்.
*பிரீமியம் செலுத்தாமல் இருப்பது (insurance lapse)
நேரத்தில் பிரீமியம் செலுத்தவில்லை என்றால், காப்பீடு ரத்து (lapse) செய்ய படும். இந்த நிலையில் ஏதாவது ஏற்பட்டு விட்டால் Claim ஏற்கப்படாது. தொழில்நுட்பக் காரணங்களால் கூட பிரீமியம் செலுத்தவில்லை என்றால், அது பெரிய தவறாகக் கருதப்படும்.
*Nominee information கொடுக்காமல் அல்லது புதுப்பிக்காமல் இருப்பது:
nominee என்பது காப்பீட்டு தொகையைப் பெறும் நபர். சிலர் இந்த தகவல்களை கொடுக்க மறுப்பார்கள் அல்லது குடும்பத்தில் மாற்றங்கள் ஏற்பட்ட பிறகும் புதுப்பிக்கமாட்டார்கள். தவறான அல்லது காலாவதியான nominee தகவலால் Claim தள்ளப்படும் அல்லது சட்ட சிக்கல்கள் ஏற்படலாம்.
*Incorrect அல்லது Incomplete தகவல்களை வழங்குதல்:
வயது, வருமானம், தொழில், குடும்பம் போன்ற விவரங்களை நீங்கள் காப்பீடு வாங்கும் போது சரியாக கொடுக்க வேண்டும்.
தெரியாமல் தவறான தகவல்களை கொடுத்தால், அந்த அடிப்படையில் Claim நிராகரிக்கப்படலாம்.
*காப்பீட்டாளரின் மரணத்தை காலத்திற்குள் தெரியப்படுத்தாதது:
காப்பீட்டாளரின் மரண தகவலை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரியப்படுத்தவில்லை என்றால் Claim நிராகரிக்கப்படலாம். ஒவ்வொரு காப்பீட்டுக்கும் தகவல் அளிக்க வேண்டிய நேரக்கெடு இருக்கும்.