
வீட்டுக்கு ஒரு பிரிட்ஜ் வாங்குவதாக இருக்கட்டும் அல்லது அரிசி என்று எந்த ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பும் பணத்தை செலவு செய்வதற்கு முன்பு நிச்சயமாக அதற்கான பேக்ரவுண்ட் வேலைகள் சிலவற்றை நீங்கள் பார்ப்பீர்கள். விலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது, review -களை படிப்பது மற்றும் தெரிந்த நபர்களிடம் கேட்பது போன்ற விஷயங்களில் ஈடுபடுவீர்கள். ஆனால், இதனை எதற்காக செய்கிறீர்கள்? கஷ்டப்பட்டு நீங்கள் சம்பாதித்த பணம் வீணாகி விடக்கூடாது என்பதற்காகத்தான். அதே லாஜிக்தான் உங்களுடைய பணத்தை நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போதும் பொருந்துகிறது.
எனினும், பல முதலீட்டாளர்கள் இது பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் தங்களுடைய பணம் எங்கு செல்கிறது? return -கள் எப்படி இயங்குகிறது அல்லது ஏதேனும் இதில் தவறாக நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? என்பது போன்ற எதுவுமே தெரியாமல் தங்களுடைய பணத்தை முதலீடு செய்துவிடுகிறார்கள்.
மியூச்சுவல் ஃபண்டுகள் என்பது complicate ஆன ஒன்று இல்லை. ஆனால், அதே சமயத்தில் அது ஒரு மேஜிக்கும் அல்ல. நீங்கள் அதனை தெளிவோடும், யதார்த்தத்தோடும் அணுகும்போது அவை உங்களுக்கு சிறப்பாக வேலை செய்யும். எனவே, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன்பு நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
யாரோ ஒருவர் முதலீடு செய்தார் என்பதற்காக நீங்களும் முதலீடு செய்யாதீர்கள். அதற்கு முன்பு “நீங்கள் 5 வருடங்களுக்கு முதலீடு செய்யப் போகிறீர்களா அல்லது 50 வருடத்திற்காக?” என்ற கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். மேலும் அது உங்களுடைய பிள்ளைக்கான கல்வி, ஓய்வு காலம் அல்லது வெக்கேஷன் போன்ற எதற்கான முதலீடு என்பதையும் கேட்டுக் கொள்ளுங்கள். உங்களுடைய இந்த கால வரம்பு மற்றும் காரணத்திற்கு ஒத்துப் போகக்கூடிய ஃபண்டுகளை தேர்வு செய்யுங்கள்.
ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்டிலுமே ஏதாவது ஒரு அளவில் Risk என்பது இருந்துகொண்டே இருக்கும். ஒரு சில மார்க்கெட்டோடு நெருங்கிய தொடர்போடு ஊசலாட்டத்திலேயே இருக்கும். மேலும், சில மெதுவாக ஆனால் நிலையானதாக இருக்கும். எனவே, உங்களுக்கு எந்த அளவிற்கு ரிஸ்க் எடுப்பது போதுமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த வருடம் சிறப்பாக செயல்பட்ட ஒரு ஃபண்ட் இந்த வருடமும் அவ்வாறே இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எனவே, எப்பொழுதும் 5 அல்லது 10 வருடங்களுக்கான return -கள் கொடுத்த ஃபண்டுகளை நீங்கள் research செய்து தெரிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் ஒரு கருப்புப் பெட்டியில் உங்களுடைய பணத்தை முதலீடு செய்யவில்லை. உங்களுடைய பணத்தை நிர்வகிக்கும் ஒரு நபர் அல்லது ஒரு குழுவை நம்பி பணத்தை ஒப்படைக்கிறீர்கள். ஆகையால் ஃபண்டு மேனேஜரின் டிராக் ரெக்கார்டை கூர்ந்து கவனியுங்கள். அனுபவம் மற்றும் முடிவு எடுக்கும் திறன் என்பது இங்கு ஒரு உண்மையான வித்தியாசத்தை ஏற்படுத்தலாம்.
அனைத்து மியூச்சுவல் ஃபண்டுகளுமே ஒரு சில கட்டணங்களை நம்மிடம் இருந்து வசூலிக்கின்றன. இது செலவு விகிதம் என்று அழைக்கப்படுகிறது. அதிக கட்டணம் என்றால் சிறந்த சேவை என்பது கிடையாது. இது உங்களுடைய ரிட்டன்களை பாதிக்கலாம். எனவே, எப்பொழுதும் ஒப்பிட்டுப் பார்ப்பது சிறந்தது.
உங்களுடைய பணம் மொத்தத்தையும் ஒரே ஒரு ஃபண்டு அல்லது பிரிவில் முதலீடு செய்ய வேண்டாம். மாறாக அதனை equity, debt, hybrid fund -கள், domestic, international என்று அனைத்து விதமான ஃபண்டுகளிலும் பிரித்து முதலீடு செய்வது சிறந்தது. ஒரு ஃபண்டு நன்றாக வேலை செய்யாவிட்டால் கூட, மற்றொன்று உங்களுக்கு work out ஆகலாம்.
முதலீடு செய்துவிட்டு மறந்துவிடுவது ஒரு மோசமான யோசனை. மார்க்கெட் மாற்றங்கள், உங்களுடைய இலக்குகள் ஆகியவை வளர்ந்துகொண்டே இருக்கும். எனவே, வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறையாவது உங்களுடைய portfolio -வை சரி பார்ப்பது அவசியம்.
வாட்ஸ்அப்களில் வரும் forward -கள் அல்லது நண்பர்கள் வழங்கும் குறிப்புகளை நம்ப வேண்டாம். மாறாக ஃபண்டு டாக்குமெண்ட்கள் ஆகியவற்றை படித்துப் பாருங்கள். நிதி ஆலோசகர்களின் யோசனைகளை கேளுங்கள். நம்பகமான மூலங்களில் இருந்துவரும் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
SIP என்று அழைக்கப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்பது வழக்கமான முறையில் சிறிய அளவிலான தொகையை முதலீடு செய்ய அனுமதிக்கிறது. மார்க்கெட் ஏற்ற இறக்கங்களை சமாளிப்பதற்கு இது ஒரு சிறந்த வழி.
ஒரு சில மியூச்சுவல் ஃபண்டுகள் வருமான வரிச் சட்டத்தில் உள்ள பிரிவு 80Cன் கீழ் வரி பிடித்தங்களை அனுமதிக்கின்றன. மேலும், ஒரு சிலவற்றில் இருந்து நாம் பெரும் ரிட்டன்களுக்கு வரி செலுத்த வேண்டும். இதனை தெரிந்து கொள்வது ஸ்மார்டாக திட்டமிடுவதற்கு உதவும்.
மியூச்சுவல் ஃபண்டுகள் 8 சதவீத ஆண்டுவாரியான ரிட்டன்களை தருவதாக பலர் நம்புகின்றனர். ஆனால் ஒவ்வொரு வருடமும் கட்டாயமாக 8 சதவீத ரிட்டன்கள் என்பது உண்மை கிடையாது. மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக உங்களுக்கு கிடைக்கும் ரிட்டன்கள் என்பது மாற்றத்திற்கு உட்பட்டது. ஒரு வருடம் 10% ரிட்டன் தரலாம். அடுத்த வருடம் 2% அல்லது எதுவுமே இல்லாமல் போகலாம்.
மார்க்கெட்டுகள் என்பது மெஷின்கள் கிடையாது. அவற்றை நம்மால் முன்பே கணிக்க முடியாது. நாளடைவில் உங்களுடைய முதலீடு எப்படி செயல்படுகிறது என்பதே இங்கு விஷயம். ஆகையால், எப்பொழுதும் உங்களுடைய எதிர்பார்ப்புகள் என்பது எதார்த்தமான ஒன்றாக இருக்க வேண்டும்.