
நான் எத்தனை mutual funds வைக்கணும்? என்றால், பதில் சுருக்கமாக சொன்னால் : மிக அதிகமான funds தேவை இல்லை. சில முக்கியமான funds மட்டும் வைத்தாலே போதும்.
Equity (Stock) Mutual Funds
பங்கு வகையில் அதிகபட்சம் 5 முதல் 7 ஃபண்ட் இருந்தால் சரியாக இருக்கும். பெரிய நிறுவனங்களை கொண்ட ஒரு Large Cap ஃபண்ட்
Market நிலைமைக்கு ஏற்ப மாற்றமடையும் Flexi-Cap அல்லது Multi-Cap ஃபண்ட் மற்றும் விலை குறைந்த பங்குகளில் முதலீடு செய்யும் Value ஃபண்ட், மாறுபட்ட யோசனை கொண்ட Contra ஃபண்ட்
Hybrid ஃபண்ட் – பங்கு + கடன் சேர்த்து இருக்கும். மத்திய அளவிலான நிறுவனங்களை கொண்ட Mid-cap ஃபண்ட்
அதிக ஆபத்தை எதிர்கொள்ள தயாராக இருந்தால் Small-cap ஃபண்ட் கூட சேர்க்கலாம். இவை நீண்ட காலத்திற்கு – குறைந்தது 7–8 வருடங்களுக்கு – வைக்கப்பட வேண்டியவை.
Debt Funds
Debt Funds பத்திரமாக இருக்கும் என்பதல்ல. அதனால் உங்கள் பணத்தை எப்ப பயன்படுத்து போறீங்க என்பதை அறிந்து தான் தேர்வு செய்ய வேண்டும். பொதுவா 4 ஃபண்ட்கள் போதும்:
2–3 வருடம்: Banking & PSU ஃபண்ட், அல்லது Interest rate-க்கு ஏற்ப மாறும் Dynamic Bond ஃபண்ட். பாதுகாப்பான கடன் பத்திரங்களில் 1–2 வருடம் Short Duration ஆக invest செய்யலாம். 1 வருடத்துக்கு கீழாக Liquid Fund – பணத்தை எப்ப வேண்டுமானாலும் எடுக்க முடியும்
Gold Fund
தங்கம் என்பது எப்பவுமே ஒரு பாதுகாப்பான முதலீடு. பொருளாதாரம் சீரல்லாத சமயங்களில் நல்ல மதிப்பு தரும்.
Demat account இருந்தா Gold ETF வாங்கலாம். இல்லனா, Gold Savings Fund எடுத்துக்கலாம். இவற்றில் 1 ஃபண்ட் போதும்.
Multi-Asset Fund (Mix Fund)
ஒரே ஃபண்ட்ல பங்கு, கடன், தங்கம் எல்லாம் கலந்திருக்கும் Multi-Asset Fund வைத்துருக்கலாம். இதில் சில ஃபண்ட்கள் வெள்ளி, வெளிநாட்டு பங்குகள், REITs-லையும் முதலீடு பண்ணும். இது ஒரு 3–5 வருட காலத்திற்கு நல்ல சராசரி வருமானம் தர வாய்ப்பு உள்ளது.
7 Equity ஃபண்ட் மற்றும் 4 Debt ஃபண்ட், 1 Gold ஃபண்ட், 1 Multi-Asset ஃபண்ட் மொத்தமாக 13 ஃபண்ட் போதும். அதிக ஃபண்ட் வைத்தால் மட்டும் நல்ல Returns வரும் என்பதில்லை.
உங்களுக்கு தேவையான, நன்கு நிரூபிக்கப்பட்ட, தரமான ஃபண்டுகளை மட்டும் தேர்வு செய்யுங்கள். நிதானமா சிந்தித்து முதலீடு செய்யுங்கள். Quantity-வல்ல, Quality தான் முக்கியம்!