
Retirement Mutual Funds என்பது நீங்கள் பணி ஓய்வு பெற்றதும் உங்கள் வாழ்க்கையைத் திட்டமிடுவதற்கு உதவும்.
Retirement mutual fund -கள் என்பவை stocks மற்றும்bond -களில் முதலீடு செய்யும். பணி ஓய்வுக் காலம் நெருங்கும்போது படிப்படியாக, Risk குறைவானவற்றில் முதலீடு செய்யத் தொடங்கும்.
Retirement Mutual Fund -களின் அம்சங்கள்
Retirement mutual funds உங்கள் பணி ஓய்வுத் திட்டங்களுக்கு ஏற்ப நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்யக்கூடியதாக இருக்கும். இந்த ஃபண்ட்களில், நீங்கள் வழக்கமாக 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட காலங்கள் நீங்கள் முதலீடு செய்த பணத்தை அப்படியே வைத்திருக்க வேண்டியிருக்கும். இதனால் உங்கள் பணத்தை சீக்கிரமே எடுத்து செலவு செய்வது தடுக்கப்படுவதுடன், அந்தத் தொகை உங்கள் பணி ஓய்வுக் காலத்தில் உதவிகரமாக இருக்கும்.
Retirement mutual fund -களானது stocks, bonds, சில நேரங்களில் real estate போன்றவற்றில் உங்கள் பணத்தைப் பரவலாக முதலீடு செய்யும். இது risk -குகளைக் குறைக்க உதவுவதுடன் நீண்டகால அடிப்படையில் லாபம் வழங்கக்கூடியதாகும்.
உங்கள் பணத்தை அதிகரிக்கச் செய்வது மற்றும் முதலீட்டை நிலையாக வைத்திருக்கக்கூடியது ஆகிய இரண்டு வகையான முதலீடுகளையும் இந்த ஃபண்ட்கள் சரியான விகிதத்தில் மேற்கொள்ளும். கொஞ்சம் பணத்தை stock -களிலும் கொஞ்சம் பணத்தை bond -களிலும் முதலீடு செய்வதன் மூலம் இந்த ஃபண்ட்கள் இதைச் செய்யும்.
stock -களில் முதலீடு செய்தாலும், இந்த ஃபண்ட்கள் கவனமாக இருப்பதுடன் அதிகப் பணத்தை அதில் முதலீடு செய்யாது. stock -களில் அதிகம் முதலீடு செய்யும் வழக்கமான ஃபண்ட்களுடன் ஒப்பிடும்போது இது மாறுபட்டதாகும். பணப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுதான் இதன் முக்கிய நோக்கம்.
சில Retirement mutual fund -கள், வரிச் சேமிப்புக்கும் உதவும். இந்த ஃபண்ட்களில் பணத்தை முதலீடு செய்யும்போது நீங்கள் குறைந்த வரியையே கட்ட வேண்டியிருக்கலாம். இதனால் நீண்டகால அடிப்படையில் பணத்தைச் சேமிக்கலாம்.
பணி ஓய்வுத் திட்டத்திற்கு மியூச்சுவல் ஃபண்ட்கள் நல்ல தேர்வாக இருக்குமா?
உங்கள் நிதி தொடர்பான லட்சியங்கள், ரிஸ்க்கைத் தாங்கும் மனப்பான்மை, முதலீட்டின் காலம் ஆகியவற்றைப் பொறுத்து ரிட்டைர்மெண்ட் மியூச்சுவல் ஃபண்ட்கள் பணி ஓய்வுத் திட்டத்திற்கான சிறந்த தேர்வாக அமையலாம்.
புதிதாகத் தொடங்குபவர்களுக்கு, Retirement mutual fund -கள், பொதுவாக வெவ்வேறு equity மற்றும் debt instrument -களுக்கு இடையே பரவலாக முதலீடு செய்திடும். இது risk -களைச் சமாளிக்கவும் சாத்தியமுள்ள return -களை வழங்கவும் உதவும்.
நீங்கள் பணி ஓய்வு வயதை அடைந்ததும், சேர்ந்த கார்பஸ் தொகையைப் பொறுத்து மாதாந்திர அடிப்படையிலோ, காலாண்டு அடிப்படையிலோ தொடர்ச்சியான கால இடைவெளிகளில் உங்களுக்குப் பணம் செலுத்தப்படும். தொடர்ச்சியாக பணம் செலுத்தப்படுவதால் பணி ஓய்வுக் காலத்தில் ஒரு நிலையான வருமானம் வரும்.
அத்துடன் உங்கள் Retirement mutual fund -களை நிபுணர்கள் கையாள்வது உங்களுக்கு பலனளிக்கும். நீண்டகால லாக்-இன் காலத்தைக் கொண்ட குறிப்பிட்ட சில Retirement mutual fund -கள் கூடுதல் நன்மையாக வரி ஆதாயத்தை வழங்குகிறது.