
Mutual Fund SWP: பென்ஷன் இல்லாதவர்கள், இளம் வயதில் சம்பாதிக்க தொடங்கும் போது, தனமாக திட்டமிட்டால், ஓய்வுக்கு பின் மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறலாம். இதற்கு மியூச்சுவல் ஃபண்டின் SWP திட்டம் கை கொடுக்கும்.
பரஸ்பர நிதியம் நீண்ட கால முதலீட்டில், ஆயிரங்களை கொடிகள் ஆகும் ஆற்றல் கொண்டது. கூட்டு வட்டி வருமானத்தின் பலனை முழுமையாக பெற, நீண்ட கால முதலீடு ஒரு பணம் காய்க்கும் மரத்தைப் போல செயல்படுகிறது என்றால் மிகையில்லை.
Mutual Fund முதலீடு: வழக்கமான முதலீடுகளை விட Fund -கள் வருமானத்தை அள்ளித் தருகின்றன என்பதால், பலர் இதில் முதலீடு செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளனர். Mutual Fund முதலீடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது இதனை உறுதிப்படுத்துகிறது. இதில் செய்யப்படும் முதலீடு மூலம் மாதம் ரூ. 1 லட்சம் வருமானம் பெற உதவும் கணக்கீட்டை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
Mutual Fund -களில் இரண்டு வகைகளில் முதலீடு செய்யலாம். ஒன்று SIP என்னும் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு முதலீடு செய்தல் இது வங்கி ஆர்டி முதலீடு போன்றது. மற்றொன்று வங்கி எப்டி போல மொத்தமாக முதலீடு செய்தல்.
மூலதன ஆதாயம்: வங்கி எப்படி திட்டங்களில் செய்யப்படும் முதலீட்டிற்கு, அதிகபட்சமாக 8% அல்லது ஒன்பது சதவிகித வட்டி வருமானம் கிடைக்கலாம். ஆனால் பரஸ்பர நிதியங்கள் குறைந்தபட்சம் 12% வருமானத்தை கொடுப்பதை சமீபத்திய தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
கூட்டு வட்டி வருமானம்: பரஸ்பர நிதியங்களில் கிடைக்கும் மூலதன ஆதாயங்கள், மிக அதிகமாக இருப்பதற்கான முக்கிய காரணம், இதில் கூட்டு வட்டி வருமானத்தின் அடிப்படையிலான மூலதன ஆதாயம். இதன் காரணமாகவே நீண்ட கால முதலீடுகள் பணம் காய்க்கும் மரங்களாக இருக்கின்றன.
Mutual Fund முதலீடு: பரஸ்பர நிதியத்தில், உங்களது முப்பதாவது வயதில் மொத்தமாக ரூ. 10 லட்சம் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். உங்களது அறுபதாவது வயது வரைக்கும், அதாவது 30 ஆண்டுகளுக்கு அதை அப்படியே விட்டு விட்டால் உங்களுக்கு கிடைக்கும் தொகை சுமார் ரூ.3 கோடி.
ரூ. 10 லட்சம் முதலீடு, 30 ஆண்டுகளில், குறைந்தபட்சம் 12% ஆண்டு வருமானம் கொடுத்தால் கூட, அதிலிருந்து கிடைக்கும் மூலதன ஆதாயம் ரூ. 2,89,59,922. உங்கள் மூலதனத்தையும், மூலதன ஆதாயத்தையும் சேர்த்தால் உங்களிடம் இருக்கும் தொகை ரூ.2,99,59,922. அதாவது சுமார் ரூ.3 கோடி.
SWP திட்ட முதலீடு: உங்களிடம் இருக்கும் ரூ.3 கோடி கார்ப்பஸை,Mutual Fund -களின் SWP திட்டத்தில் முதலீடு செய்தால், நீங்கள் உங்கள் விருப்பத்தின் படி, ரூ. 50,000, ரூ. 70,000, ரூ. ஒரு லட்சம், என ஒரு தொகையைத் தேர்ந்தெடுத்து மாதா மாதம் பென்ஷனை போன்ற வருமானம் பெறலாம்.
ரூ.1லட்சம் வருமானம்: SWP திட்டத்தில், ரூ. ஒரு லட்சம் வருமானம் பெறுவதை தேர்ந்தெடுத்தால், 30 ஆண்டுகளுக்கு, அதாவது உங்களது 90 வது வயது வரை, மாதம் ஒரு லட்சம் எடுத்துக் கொள்ளலாம்.
லட்சங்களில் கார்ப்பஸ்: 90 வயது வரை ஒரு லட்சம் என்ற அளவில் மாதம் தோறும் எடுத்தும் கூட, உங்களிடம், லட்சங்களில் கார்ப்பஸ் எஞ்சி இருக்கும். நீங்கள் ஒரு லட்சம் ரூ. என்பதை கொஞ்சம் குறைத்துக் கொண்டு மாதம் 70 ஆயிரம் என்ற அளவில் வருமானம் பெற முடிவு செய்தால், இன்னும் பத்து ஆண்டுகள் அதிகமாக ஒரு லட்சம் ரூபாயை வருமானமாக பெறலாம்.