
இந்தியாவில் Mutual Fund -கள் எனப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கின்றன. Large cap எனப்படும் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள், Midcap எனப்படும் மத்திய அளவிலான மூலதன மதிப்பு கொண்ட நிறுவனங்கள், Smal cap எனப்படும் சிறு நிறுவனங்களின் பங்குகளில் பிரத்தியேகமாக முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் உள்ளன.
Mutual Funds: கடந்த பத்தாண்டுகளில் இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களையும், மறுபுறம் விறுவிறுப்பான வளர்ச்சியையும் கண்டுள்ளது. இந்த காலக் கட்டத்தில் Large cap, small cap, mid cap ஆகிய மூன்று முக்கிய ஈக்விட்டி நிதி வகைகளில் முதலீடு செய்தவர்களில் எந்த திட்டம் முதலீட்டாளர்களுக்கு சிறந்த லாபம் தந்துள்ளது என்பதை பார்க்கலாம்.
10 ஆண்டுகளில் எதில் அதிக லாபம்: கடைசி பத்தாண்டுகளில் Small cap Fund -கள் சராசரியாக 17.35% வருமானத்தையும், Midcap Fund -கள் சராசரியாக 16.27% வருமானத்தையும் அளித்துள்ளன. Large cap Fnd -களின் சராசரி செயல்பாடு 12.79% ஆக இருந்தது. ஆனால் இந்த மூன்றிலும் அதற்கே உரிய Risk மற்றும் Reward இருப்பதை உணர்ந்து முதலீடு செய்வது நல்லது.
Small cap Funds : Small cap பிரிவில் செயல்படும் Mutual Fund திட்டங்களில்
Nippon India Small Cap Fund 22.67%
Axis Small Cap Fund 20.43% ,
Quant Small Cap Fund 20.34%,
SBI Small Cap Fund 20.33%,
HDFC Small Cap Fund 20.17% என வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை தந்துள்ளது.
Midcap Funds : Midcap பிரிவில் இருக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளில் ,கடந்த பத்தாண்டுகளில் சுமார் 19% முதல் 20% வரை வருமானத்தை ஈட்டியவை குறித்து தெரிந்து கொள்ளலாம். இதில்
Invesco India Midcap Fund 20.33%,
Kotak Midcap Fund 19.82%,
Edelweiss Midcap Fund 19.60%,
Motilal Oswal Midcap Fund 19.29%,
Nippon India Growth Midcap Fund 18.98% லாபம் தந்துள்ளன.
Large cap Funds: Large cap மியூச்சுவல் ஃபண்டுகளில்
Quant Focused Fund 16.03% ,
Nippon India Large Cap Fund 15.68%,
ICICI Prudential Large Cap Fund 15.60% ,
Canara Robeco Large Cap Fund 15.52%,
Invesco India Large Cap Fund 14.90% என லாபம் தந்துள்ளன.
எதில் ரிஸ்க் அதிகம்: Small cap நிதிகள் அதிக வருமானத்தை வழங்கி இருந்தாலும் அதிக Risk -கையும் கொண்டுள்ளன. சந்தை வீழ்ச்சியின் போது இவை பெரிதும் பாதிக்கப்படும். Midcap நிதிகள் சீரான வகையைச் சேர்ந்தவை. இவற்றில் வளர்ச்சி வாய்ப்புகளும் சிறப்பாக உள்ளன, மேலும் Smap cap நிதிகளை விட Risk குறைவு.Large cap நிதிகள் நிலையான மற்றும் பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களாகக் கருதப்படுகின்றன. இவற்றில் Risk ஒப்பீட்டளவில் குறைவு, ஆனால் பிற வகைகளுடன் ஒப்பிடுகையில் வருமானமும் குறைவாகவே இருக்கும்.