சீனா தற்போது அமெரிக்காவிலிருந்து அதிக அளவில் சோயாபீன்ஸ் வாங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது. பொருளாதார ரீதியாக பார்த்தால், இது சீனாவுக்கு லாபகரமான முடிவு அல்ல. காரணம், இந்த காலத்தில் பிரேசிலில் இருந்து வரும் சோயாபீன்ஸ் மிகவும் மலிவாக கிடைக்கிறது. ஆனால், அமெரிக்காவிலிருந்து வாங்கினால் சீனாவுக்கு அதிக செலவு ஏற்படுகிறது. உதாரணமாக, 8 மில்லியன் மெட்ரிக் டன் அமெரிக்க சோயாபீன்ஸ் வாங்கினால், பிரேசிலில் இருந்து வாங்குவதை விட சுமார் 400 மில்லியன் டாலர் கூடுதல் செலவு ஆகும் என்று கணிக்கப்படுகிறது.
இதைத் தவிர, அமெரிக்க சோயாபீன்ஸுக்கு சீனா அதிக வரி (சுமார் 13%) விதிக்கிறது, ஆனால் பிரேசிலிய சோயாபீன்ஸுக்கு குறைந்த வரி (சுமார் 3%) மட்டுமே உள்ளது. இதனால் தனியார் எண்ணெய் ஆலைகள் அமெரிக்க சோயாபீன்ஸை வாங்க விரும்பவில்லை. அதனால், சீன அரசு நிறுவனங்கள் (Sinograin,COFCO போன்றவை) மூலமாகவே இந்த கொள்முதல் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. அவை பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவை அதிகமாக தேர்வு செய்துள்ளன.
ஆனால் அரசியல் ரீதியாக பார்த்தால், இந்த முடிவு முக்கியமானதாக இருக்கலாம். ஏப்ரல் மாதத்தில் டிரம்ப் சீனாவுக்கு வரவுள்ள நிலையில், அவரை மகிழ்விக்கவும், அமெரிக்காவிடமிருந்து சில வர்த்தக சலுகைகள் பெறவும் சீனா அதிக அளவில் அமெரிக்க சோயாபீன்ஸ் வாங்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதனால், இது purely பொருளாதார முடிவு அல்ல; அரசியல் கணக்கீட்டின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு என்று நிபுணர்கள் விளக்குகின்றனர்