இன்றைய காலத்தில் பலர் பங்கு சந்தை (Stock Market), Mutual Fund, IPO, Trading போன்ற முதலீடுகளில் ஆர்வம் காட்ட தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் முதலீடு செய்யும் முன் முக்கியமாக தெரிந்திருக்க வேண்டிய ஒன்று தான் SEBI. நாம் பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்கிறோம். அந்த பணம் பாதுகாப்பாக இருக்க யார் கவனிக்கிறார்கள்? அதற்காகவே இந்திய அரசால் உருவாக்கப்பட்ட அமைப்புதான் SEBI (Securities and Exchange Board of India).
SEBI (Securities and Exchange Board of India) என்பது இந்தியாவின் பங்கு சந்தையை கட்டுப்படுத்தும் (Regulator) மற்றும் முதலீட்டாளர்களை பாதுகாக்கும் அரசு அமைப்பு. சுருக்கமாக சொன்னால் இந்திய பங்கு சந்தையின் போலீஸ் + நீதிபதி + காவலர் எல்லாம் சேர்ந்து இருப்பது SEBI தான்.
SEBI ஏன் முக்கியம்?
SEBI இல்லையெனில் பங்கு சந்தை மிகவும் ஆபத்தான இடமாக மாறிவிடும். முந்தைய காலங்களில் மோசடி, போலி நிறுவனங்கள், ஆபரேட்டர் வர்த்தகம் (Operator Trading) போன்ற மோசடிகள் அதிகமாக இருந்தன. SEBI உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம், முதலீட்டாளர்களை (Investors) பாதுகாக்க, பங்கு சந்தையில் நியாயமான வர்த்தகம் நடைபெற, மோசடிகளை தடுக்க, நிறுவனங்களை கட்டுப்படுத்த.
SEBI-யின் முக்கிய அம்சங்கள்:
SEBI-யின் முதல் மற்றும் முக்கியமான வேலை முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பது. பலருக்கு பங்கு சந்தை என்றாலே “risk” என்று பயமாக இருக்கும். காரணம் மோசடிகள் இதை குறைப்பதற்காக SEBI பல விதிகளை உருவாக்கியுள்ளது. NSE, BSE போன்ற பங்கு சந்தைகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று SEBI தான் முடிவு செய்கிறது. வர்த்தக நேரம், Circuit limit (ஒரு நாளில் எவ்வளவு விலை உயரும்/குறையும்), பட்டியல் விதிகள், இவற்றை எல்லாம் நிர்ணயிக்கிறது.
ஒரு நிறுவனம் பொதுமக்களிடமிருந்து பணம் பெற IPO (Initial Public Offering) வெளியிடும். SEBI IPO-வை அனுமதிக்கும் முன் நிறுவனத்தின் நிதி அறிக்கைகள், கடன் நிலை (Debt), ஆபத்து காரணிகள், அனைத்தையும் சரிபார்க்கும். இதனால் மோசடி நிறுவனங்கள் பொதுமக்களின் பணத்தை எளிதில் பெற முடியாது. ஒரு நிறுவனத்தின் ரகசிய தகவல் பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கு முன் சிலருக்கு தெரிந்தால் அவர்கள் share வாங்கி லாபம் அடையலாம் இதை Insider Trading என்பார்கள். SEBI சந்தேகத்திற்கிடமான வர்த்தக முறையை தடை செய்கிறது.
SEBI என்பது சாதாரண அரசு அலுவலகம் அல்ல. இந்தியாவின் கோடிக்கணக்கான முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாக்கும் முக்கியமான அமைப்பு. பங்கு சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் முதலில் SEBI பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.