Securities and Exchange Board of India (SEBI) mutual fund துறையில் சில முக்கியமான மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் முக்கியமான ஒன்று Life-Cycle Funds. இந்த முறையின் அடிப்படை யோசனை என்னவென்றால், வயது அதிகரிக்கும் போது முதலீட்டில் எடுக்கக்கூடிய risk capacity மாறும். இளம் முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு காலம் நீண்டதால் equity exposure அதிகமாக இருக்கும்; ஆனால் retirement அருகில் வரும் போது stability தேவையாக இருப்பதால் equity allocation குறைந்து debt allocation அதிகரிக்கும்.
மேலும் SEBI equity mutual funds-க்கு diversification அதிகரிக்க gold மற்றும் silver -ல் (பொதுவாக ETF மூலம்) முதலீடு செய்ய அனுமதி அளித்துள்ளது. புதிய விதிகளின்படி portfolio-வில் சுமார் 35% வரை gold அல்லது silver போன்ற assets-க்கு allocate செய்ய முடியும். இதற்கு முன்பு முதலீட்டாளர்கள் growth-க்காக equity funds மற்றும் stability-க்காக gold -ஐ தனியாக வைத்திருந்தார்கள்; இதனால் equity funds சில நேரங்களில் multi-asset portfolio போல செயல்பட வாய்ப்பு உள்ளது.
Asset Management Companies இப்போது Value Funds, Contra Funds என்ற இரண்டு வகை funds- யையும் வழங்கலாம், ஆனால் இரண்டு fund-களின் portfolio overlap 50%-ஐ தாண்டக்கூடாது என்ற விதி உள்ளது. Value funds பொதுவாக undervalued ஆனால் fundamentally strong companies-ல் முதலீடு செய்யும்; contra funds சந்தையின் prevailing sentiment-க்கு எதிராக முதலீடு செய்யும். இந்த விதியின் மூலம் ஒரே மாதிரியான stocks-ஐ வைத்து வேறு பெயரில் funds launch செய்வதை தடுக்க SEBI முயற்சி செய்கிறது.
இந்த மாற்றங்கள் retail முதலீட்டாளர்களுக்கு பல நன்மைகளை தரும். Fund categories தெளிவாக இருக்கும், fund name மற்றும் investment style சரியாக பொருந்தும், mis-selling குறையும், மேலும் equity funds-லேயே gold மற்றும் silver exposure கிடைப்பதால் diversification மேம்படும். இதனால் investors குறைந்த எண்ணிக்கையிலான funds-ல் ஒரு balanced portfolio உருவாக்க முடியும்.