இந்திய ரூபாய் ஒரு நாளிலேயே 173 பைசா அளவுக்கு strong ஆகி உயர்ந்தது. சாதாரணமா currency இவ்வளவு பெரிய அளவுக்கு ஒரு நாளில் move ஆகாது, அதனால இது ஒரு பெரிய movement. இதுக்கான main reason என்னனா, RBI (Reserve Bank of India) market-ல் direct-ஆ intervene பண்ணியது. எப்படி intervene பண்ணுச்சுனா – RBI தன்னோட foreign reserves-ல இருந்து dollars-ஐ market-க்கு sell பண்ணுச்சு. Market-ல dollar supply அதிகமா வந்ததும், dollar value கொஞ்சம் குறையும்; அதே நேரம் rupee demand அதிகரிக்கும். அதனால் ரூபாய் strong ஆகி value உயர்ந்தது.
இது எதனால அப்டின்னா கடந்த சில நாட்களா ரூபாய் ரொம்ப weaken ஆகி இருந்தது. அதுக்கு காரணம் – crude oil import பண்ணுற companies அதிகமா dollars வாங்கினாங்க (India oil import country), foreign investors இந்திய market-ல இருந்து பணம் வெளியே எடுத்தாங்க, மேலும் global-ஆ US dollar strong-ஆ இருந்தது. இதெல்லாம் சேர்ந்து rupee மீது pressure create பண்ணிச்சு.
இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னனா, RBI speculation-ஐயும் control பண்ண try பண்ணுது. சில traders offshore market (NDF market)ல rupee future value-ஐ predict பண்ணி bet பண்ணுவாங்க. இது sometimes rupee-ஐ இன்னும் weaken ஆக push பண்ணும். அதனால RBI அந்த side-லயும் control measures எடுத்திருக்காங்க. இதுவும் rupee strong ஆக உதவுச்சு.
ஆனா இது permanent solution இல்லன்னு experts சொல்லுறாங்க. ஏன்னா, RBI வந்து support பண்ணாத நேரத்தில் மீண்டும் same global pressures (strong dollar, oil prices, foreign outflow) வந்தா, rupee மீண்டும் weaken ஆகலாம். அதனால் இந்த 173 பைசா jump ஒரு short-term relief மாதிரி தான் பார்க்கணும், long-term trend இன்னும் global situation- அ depend பண்ணி தன இருக்கு.