அமெரிக்கா மற்றும் Iran இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் Islamabad-ல் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் இல்லாமல் நிறுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரான் துறைமுகங்களுக்கு கடல் தடையை (naval blockade) அறிவித்து, பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தத்தை அதிகரித்துள்ளது. இதற்கு பதிலாக, ஈரான் Strait of Hormuz வழியாக செல்லும் கப்பல்களை தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்து, தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. எனினும், இத்தகைய பதற்றமான சூழ்நிலையிலும் இரு நாடுகளும் மீண்டும் இந்த வாரத்திலேயே பேச்சுவார்த்தைக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நம்பிக்கை காரணமாக global oil market – ல் சிறிய அமைதி ஏற்பட்டுள்ளது; முன்பு உயர்ந்திருந்த oil price தற்போது $100 க்குக் கீழே குறைந்துள்ளது. இதனால், இந்த பிரச்சினை அரசியல் மட்டுமல்லாமல் உலக பொருளாதாரத்திற்கும் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.