அமெரிக்க அதிபர் Donald Trump உலக நாடுகளின் பொருட்களுக்கு விதித்த 10% tariff-ஐ அமெரிக்க நீதிமன்றம் illegal என்று தீர்ப்பு அளித்துள்ளது. “America First” policy-யின் கீழ், இந்தியா, சீனா, கனடா போன்ற நாடுகள் அமெரிக்காவை trade-ல் பயன்படுத்திக்கொள்கின்றன என்று கூறி, Trump 10% முதல் 50% வரை import tax விதித்தார். இந்தியாவுக்கும் முதலில் 50% tariff விதிக்கப்பட்டு, பின்னர் trade deal காரணமாக 18% ஆக குறைக்கப்பட்டது.
அமெரிக்க நீதிமன்றம் Donald Trump விதித்த உலகளாவிய tariff-ஐ சட்டவிரோதம் என்று கூறியிருப்பது இந்தியாவுக்கு ஒரு நல்ல முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் textile, electronics, automobile parts, steel போன்ற பொருட்களின் மீதான கூடுதல் வரிச்சுமை குறைய வாய்ப்பு உள்ளது. அதனால் இந்திய நிறுவனங்களுக்கு export cost குறைந்து, business மற்றும் profit அதிகரிக்கலாம். மேலும், இது இந்திய பங்குச்சந்தை மற்றும் வர்த்தக சூழலுக்கும் positive signal ஆக இருக்கும். ஆனால், Trump அரசு இந்த தீர்ப்புக்கு எதிராக appeal செய்ய இருப்பதால் இன்னும் uncertainty நீடிக்கிறது. எதிர்காலத்தில் புதிய சட்டங்கள் மூலம் மீண்டும் tariffs கொண்டு வர முயற்சி செய்யலாம் என்பதால், இந்தியா தொடர்ந்து அமெரிக்காவின் trade policy மாற்றங்களை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது.
ஆனால், இந்த தீர்ப்புக்கு Trump அதிருப்தி தெரிவித்து, “country economy பாதுகாப்புக்கு இந்த tariffs அவசியம்” என்று கூறினார். மேலும், tariff policy-யை நிறுத்தப் போவதில்லை என்றும் தெரிவித்தார். தற்போது இந்த தீர்ப்புக்கு எதிராக Trump அரசு appeal செய்ய உள்ளது.