2026 Budget-ல் Sovereign Gold Bond (SGB) குறித்து முக்கியமான tax மாற்றம் கொண்டு வந்திருக்காங்க. இதுவரை SGB-ஐ RBI original issue-ல வாங்கினாலும் அல்லது stock exchange (secondary market)-ல வாங்கினாலும் maturity வரை வைத்திருந்தால் capital gains tax கிடையாது என்ற விதி இருந்தது. ஆனால் புதிய Budget விதிப்படி, capital gains tax exemption இனிமேல் RBI original issue-ல நேரடியாக வாங்கி maturity வரை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். Secondary market-ல அதாவது (NSE/BSE-ல) வாங்கப்பட்ட SGB-களுக்கு maturity-ல கிடைக்கும் லாபம் capital gains tax-க்கு உட்படும். stock market-ல SGB வாங்கியவர்கள் long-term capital gains tax அல்லது short-term tax கட்ட வேண்டிய நிலை வரும். இதனால் secondary market-ல் SGB வாங்கும் முதலீட்டாளர்களின் returns குறையும், discount-ல் வாங்கி tax-free profit எடுக்கும் வாய்ப்பும் உள்ளது. இந்த புதிய விதி 1 April 2026 முதல் நடைமுறைக்கு வரும். அரசின் நோக்கம் tax loophole-ஐ குறைத்து long-term original investors-க்கு மட்டும் benefit கொடுக்க வேண்டும் என்பதே.