உலக சந்தையில் crude oil விலை ஒரு நேரத்தில் $120 per barrel வரை போயிருந்தது. இப்போ அது சுமார் $100 அளவுக்கு குறைந்திருக்கிறது. விலை குறைந்ததால இந்தியாவுக்கு பெரிய லாபம் கிடைக்கும் என்று நினைத்தாலும், உண்மையில் அப்படி இல்லை. காரணம், இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக குறைந்திருப்பது. அதனால் crude oil விலை குறைந்தாலும், இந்தியா அதை வாங்கும் ரூபாய் செலவு அதிகமாகவே இருக்கிறது.
உதாரணமாக சொல்லணும்னா, crude oil விலை $120 இருந்த சமயத்தில் ஒரு டன் oil வாங்க இந்தியா சுமார் ₹79,000 செலவு செய்தது. ஆனால் இப்போ crude oil விலை $100 இருந்தாலும், ரூபாய் மதிப்பு குறைந்ததால் ஒரு டன் oil வாங்க ₹1,10,000 வரை செலவு ஆகுது. கடந்த சில வருடங்களில் ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக சுமார் 20% வரை குறைந்திருக்கு. அதனால oil price குறைந்தாலும் இந்தியாவுக்கு import cost அதிகமா தான் இருக்கு.
Crude oil விலை அதிகமாக இருந்தா அதோட தாக்கம் பல இடங்களிலும் தெரியும். Petrol, diesel, LPG, aviation fuel மாதிரி எரிபொருட்களின் விலையும் உயர வாய்ப்பு இருக்கு. அதே மாதிரி fertilizer, petrochemical products தயாரிப்பு செலவும் கூடும். அதனால crude oil விலை மாற்றமும், ரூபாய் மதிப்பு மாற்றமும் இந்திய பொருளாதாரத்துக்கு நேரடியாக தாக்கம் கொடுக்கக்கூடிய விஷயம்.