
Dynamic Asset Allocation Fund என்பது ஒரு Mutual Fund வகை தான். இது equity மற்றும் debt கலந்து முதலீடு செய்வது ஆகும். மார்க்கெட் சூழ்நிலையை பொறுத்து Equity மற்றும் Debt முதலீடு சதவீதத்தை fund manager மாற்றியமைப்பார்.
மார்க்கெட்டில் ஆபத்து அதிகமாக இருந்தால் Fund-ஐ Debt-க்கு மாற்றி அமைப்பார்.மார்க்கெட்டில் Returns அதிகம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தால் Fund-ஐ Equity-யில் முதலீடு செய்வார் நீங்கள் இதை நினைத்து கவலை கொள்ள தேவையில்லை, Dynamic Fund தானாகவே மார்க்கெட்டின் நிலைமைக்கு தகுந்தவாறு மாறுபடும்.
2024-யில் மார்க்கெட்டின் நிலைமை கீழ்நோக்கி சென்றதால் Dynamic Asset allocation fund நம் முதலீடுகளை பாதுகாப்புபடுத்திருந்தன. 2025-யில் மார்க்கெட்டின் நிலைமை மேல்நோக்கி சென்றாலும் லாபத்தின் வாய்ப்பை தவறவிடாமல் செய்து முதலீடு செய்யும்.
இதனுடைய நன்மைகள் என்று பார்த்தால் மார்க்கெட்டின் சூழ்நிலைக்கேற்ப Asset மாறப்படும். இதில் ஆபத்து குறைவு அதற்கு ஏற்ப Returns இருக்கும்.
Beginners-க்கு Dynamic asset நல்ல ஒரு வாய்ப்பு. அதிகபட்சமாக equity oriented structure பயன்படுத்தும். இதன் குறைகள் என்னவென்றால் மற்ற Equity Fund-களை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இதில் Moderate Returns வரும்.
சுருக்கமாக Stock Market-ஐ பற்றி அதிகம் யோசிக்காமல் பாதுகாப்பாகவும் எளிய முறையிலும் முதலீடு செய்ய வேண்டும் என்றால் Dynamic Asset Allocation Fund உங்களுக்கானது.