
Brown rice
விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை மனதில் கொண்டு, ஒரு பிரபல நிறுவனம் தனது First brown Sona Masoori rice இந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்ய தயாராகி வருகிறது.
AI-இயங்கும் தரக் கட்டுப்பாட்டு முறையின் கீழ், First brown Sona Masoori rice மற்றும் MRL இணக்கத்துடன் கூடிய பொன்னி ஆகியவை தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில், புதிய அரிசி ஏற்றுமதி சந்தை 1.5 லட்சம் டன்னைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த நிறுவனம் கருப்பு கவுனி, பூங்கர், மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய வகைகளை உற்பத்தி செய்ய விவசாயிகளை தூண்டி வருகிறது. பயிர் ஆரோக்கியத்தை கண்காணிக்கவும், களைக்கொல்லிகள் 100 சதவீதம் துல்லியமாக தெளிக்கப்படுவதை உறுதி செய்யவும் drones – களைப் பயன்படுத்த விரும்புகிறது.
மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் கடலூர் ஆகிய தமிழக மாவட்டங்களில் எம்ஆர்எல் திட்டத்திற்காக, 20,000 ஏக்கருக்கு 1,500 விவசாயிகளை சேர்த்துள்ளது. இதேபோன்ற திட்டம் கர்நாடகாவிலும் நடப்படுகிறது.