US-Iran அணு பேச்சுவார்த்தைகள் பல முறை தோல்வியடைந்ததையடுத்து, மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்திற்கே முதலீட்டாளர்கள் இப்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். சமீப நாட்களில், Brent crude oil விலை மேலும் உயரும் என எதிர்பார்த்து, வர்த்தகர்கள் அதிக அளவில் ‘‘call options’’ வாங்கியுள்ளதாக Saxo Bank தெரிவித்துள்ளது. முக்கிய Oil உற்பத்தி நாடுகளில் crude oil கையிருப்புகள் குறைந்ததையும், ஏற்றுமதி வரம்புக்குள் இருந்ததையும் பற்றிய தகவல்கள் oil விலைக்கு ஆதரவாக இருந்தன.
ஏப்ரல் மாதத்திலிருந்து OPEC+ உற்பத்தியை அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, அதிகளவிலான விநியோகத்தின் தாக்கத்தையும் சந்தைகள் பரிசீலித்து வருகின்றன. JPMorgan ஆய்வாளர்கள் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் காணப்பட்ட oil oversupply ஜனவரியிலும் தொடர்ந்துள்ளதாகவும், அது தொடரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர். 2027 ஆம் ஆண்டில் அதிகப்படியான கையிருப்பைத் தவிர்க்க தினமும் 2 மில்லியன் பீப்பாய்கள் உற்பத்தியை குறைக்க வேண்டியிருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.