
Chrome elemental specimen sample isolated on white background, mining and gemstone concept.
Trade Tensions காரணமாக வெள்ளி விலைகள் 1.24% குறைந்து 94,729 -ஆக இருந்தது. அமெரிக்க ஜனாதிபதி இந்தியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் சீனாவுடனான Positive Trade Talks -ஐ பகிர்ந்து கொண்ட பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டது. அதே நேரத்தில், Poor Global Economic Data காரணமாக தொழில்துறை பயன்பாட்டிற்கான வெள்ளியின் தேவை பலவீனமடைந்தது. மேலும் ஏற்றுமதி ஆர்டர்கள் வீழ்ச்சியடைந்ததால் சீனாவின் உற்பத்தி செயல்பாடு 16 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
பசுமை தொழில்நுட்பங்களில் அதிகரித்து வரும் பயன்பாடு காரணமாக, 2025 ஆம் ஆண்டில் தொழில்துறை தேவை 700 மில்லியன் அவுன்ஸ்களுக்கு மேல் சாதனை அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக தேவை விநியோகத்தை விட அதிகமாக இருப்பதற்கு வழிவகுக்கிறது. நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களுக்கான தேவை குறைந்து வரும் நிலையில் அதுவும் குறிப்பாக இந்தியாவில் அதிக விலைகள் காரணமாக Industrial Use மற்றும் Physical Investment மீதான ஆர்வம் அதிகரிப்பது உலகளாவிய தேவையை சுமார் 1.2 பில்லியன் அவுன்ஸ்களாக நிலையாக வைத்திருக்க உதவுகிறது.