
இந்தியாவில், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் எல்ஐசி(LIC) என்ற ஒரு திட்டத்தை மட்டுமே வைத்துக்கொண்டு மக்கள் தங்கள் எதிர்காலத்தை பாதுகாத்து வருவார்கள். ஆனால் இன்று சந்தையில் பல திட்டங்கள் உள்ளது. இதற்கு ஏற்றார் போல் மக்களுக்கு முதலீட்டு திட்டங்கள் உக்திகள் குறித்த விழிப்புணர்வு அதிகமாக கிடைக்கிறது.
இந்த நிலையில் தற்போது சந்தையில் புதியாக டிரெண்டாகி வரும் விஷயம் என்றால் அது , மைனர் ஃபோலியோ எனப்படும் சிறுவர் முதலீட்டு கணக்குகள் தான். இத்திட்டம் குறித்து எடெல்விஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிர்வாக இயக்குநரின் சில முக்கியமான விளக்கமும் கொடுத்துள்ளார்.
Minor Portfolio என்றால் என்ன?
Minor folio என்பது, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் பெயரில் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ துவங்கி, நிர்வகிக்கும் முதலீட்டு கணக்கு ஆகும். பொதுவாக, இது Mutual fund -ல் செய்யப்படும் முதலீடாக இருக்கும். அந்த குழந்தை 18 வயதை அடையும் வரை, பாதுகாவலர் அந்தக் கணக்கை நிர்வகிப்பார்.
தனி உரிமையாளர்: Minor Folio எப்போதும் சிறுவர் பெயரில் மட்டுமே இருக்கும். பாதுகாவலர் அல்லது பெற்றோர் பிரதிநிதியாக செயல்படுவார். சிறுவருடன் இணைந்து கூட்டாக கணக்கு திறக்க முடியாது.
பாதுகாவலரின் பங்கு: சிறுவர் 18 வயதை அடையும் வரை, முதலீடுகளை மேற்கொள்வது, கணக்கை நிர்வகிப்பது உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளும் பாதுகாவலருக்கே உண்டு.
வழக்கமான கணக்காக மாற்றம்: சிறுவர் 18 வயதை அடைந்ததும், Minor Folio வழக்கமான தனிநபர் கணக்காக மாற்றப்படும். அதன் பிறகு, அந்த இளைஞரே தனது முதலீடுகளை நேரடியாக நிர்வகிக்கலாம்.
சமீபத்தில், எடெல்விஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான ராதிகா குப்தா, மைனர் ஃபோலியோ குறித்து ட்விட்டரில் சில முக்கியமான கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
- சிறுவருக்கு Pan card இல்லாவிட்டால், Minor Folio -வை உருவாக்க முடியுமா?
முடியும். Minor Folio -வை உருவாக்க சிறுவரின் Pan card கட்டாயமில்லை. பாதுகாவலரின் Pan card மட்டும் இருந்தால் போதும். - Minor Folio -வை உருவாக்க என்ன ஆவணங்கள் தேவை?
பாதுகாவலரின் Pan card, சிறுவருடனான உறவை நிரூபிக்கும் ஆவணங்கள் (பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் அல்லது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆவணம்) தேவை. சிறுவரின் Pan card கட்டாயமில்லை. - பாதுகாவலர் மற்றும் சிறுவரின் வங்கி கணக்கிலிருந்து SIP (Systematic Investment Plan) செலுத்த முடியுமா?
முடியும். SIP சந்தா மற்றும் மொத்த பரிவர்த்தனைகளுக்கு பாதுகாவலர் மற்றும் சிறுவரின் வங்கி கணக்குகளைப் பயன்படுத்தலாம். ஆனால், பணம் எடுக்கும்போது, அது சிறுவரின் வங்கி கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்படும். - மைனர் ஃபோலியோவை உருவாக்க எவ்வளவு நேரம் ஆகும்?
சிறுவர்/பாதுகாவலர் உறவு ஆவணத்தின் சரிபார்ப்புக்கு உட்பட்டு, Minor Folio -வை உருவாக்க 2 வேலை நாட்களுக்குள் ஆகும். ஃபோலியோ உருவாக்கும்போது அல்லது அதற்குப் பிறகும் முதல் பரிவர்த்தனையைத் தொடங்கலாம். - சந்தேகங்களுக்கு எங்கு தொடர்பு கொள்வது?
ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழ்கண்ட முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்:
மின்னஞ்சல்: EMFHelp@edelweissmf.com
கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800-425-0090
கட்டணம் வசூலிக்கப்படும் தொலைபேசி எண்: +91-40-23001181
சிறுவர்களின் எதிர்காலத்திற்கான முதலீடுகளைத் திட்டமிடும் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு, மைனர் ஃபோலியோ ஒரு பயனுள்ள வழியாக இருக்கும்.