பலருக்கும் இந்த இரண்டு Fund-களை பற்றிய சந்தேகம் இருக்கும். காரணம், இவற்றில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் ஒன்று போல இருப்பதால்… ஆனால், இவை இரண்டும் ஒன்றல்ல… இரண்டு Fund-களும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்றன. அது எவ்வாறு என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
மியூச்சுவல் ஃபண்டை பொருத்தவரை பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்ய Large Cap ஃபண்டுகளும், நடுத்தர நிறுவனங்களில் முதலீடு செய்ய Mid Cap ஃபண்டுகளும், சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்ய Small Cap ஃபண்டுகளும் உள்ளன.
பெரிய, சிறிய மற்றும் நடுத்தர என அனைத்து நிறுவனங்களிலும் முதலீடு செய்யும் ஒரு நிதி வகை தான் Multi Cap Fund. இங்கு மூன்று வகையான நிறுவனங்களிலும் (large, mid, small cap) தலா 25% முதலீடு செய்யப்படுகிறது. மீதி 25% தொகையானது Fund Manager-ன் விருப்பத்தின்படி எந்த வகை நிறுவனத்தின் வேணாலும் முதலீடு செய்யப்படலாம்.
ஆனால், Flexi Cap-ல் இந்த மாதிரியான எந்த கட்டுப்பாடும் கிடையாது. Fund Manager-ன் விருப்பத்தின்படி எந்த வகை நிறுவனத்திலும், எவ்வளவு தொகை வேணாலும் முதலீடு செய்யலாம். தற்போதைய நிலவரத்தின் படி, 60-65 சதவீத முதலீடானது Large cap நிறுவனங்களிலே முதலீடு செய்யப்படுகிறது.
மூன்று வகை நிறுவனங்களிலும் முதலீடு செய்வதால் சந்தையில் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் Fund Manager-ஆல் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட வகை நிறுவனங்களை சார்ந்த ரிஸ்க் தவிர்க்கப்படுகிறது. இதனால் இந்த வகை fund கள் புதிதாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களுக்கு ஏற்றதாக உள்ளது.
இவை இரண்டும் Equity ஃபண்டுகளாக இருப்பதால் நீண்ட கால நோக்கில் நல்ல பலனை அளிக்கும்.