கொஞ்ச நாள் முன்னாடி Securities and Exchange Board of India (SEBI) Solution Oriented Funds (Retirement & Children Funds) குறித்து ஒரு uncertainty உருவானது. ஒரு category-க்கு ஒரு scheme மட்டும் இருக்க வேண்டும் என்ற விதிமுறையால், இந்த funds-ஐ merge செய்ய வேண்டுமா அல்லது close செய்ய வேண்டுமா என்ற குழப்பம் mutual fund நிறுவனங்களுக்கும் investors-க்கும் ஏற்பட்டது.
இந்த குழப்பத்துக்கு இப்போது SEBI தெளிவான விளக்கம் கொடுத்துள்ளது. Retirement மற்றும் Children Funds என்பது long-term goals (retirement planning, குழந்தைகளின் future needs) அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்பதால், அவற்றை தனி category ஆகவே வைத்து தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த schemes-ஐ merge அல்லது close செய்ய வேண்டிய அவசியம் இல்லை; investors-க்கும் அவர்கள் முதலீடு செய்த திட்டங்கள் பாதிக்கப்படாமல் தொடரும் என்ற நம்பிக்கை கிடைக்கிறது. மேலும், lock-in period இருப்பதால் disciplined மற்றும் long-term investing ஊக்குவிக்கப்படுகிறது. Overall-ஆ இந்த முடிவு investors confidence-ஐ பாதுகாக்கவும், goal-based investing-ஐ support செய்யவும் உதவும் ஒரு முக்கியமான step ஆகும்.