
சந்தை ஏற்ற இறக்கங்களோடு நேரடி தொடர்பு இல்லாமல் பல்வேறு பங்குகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை மியூச்சுவல் ஃபண்டுகள் வழங்குகின்றன. இதில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் பெரிய அளவிலான தொகைகளை முதலீடு செய்யும் திட்டங்கள் மற்றும் systematic investment plans ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யலாம்.
நீண்டகால முதலீட்டை நோக்கமாகக் கொண்ட முதலீட்டாளர்களுக்கு SIPகள் ஏற்ற ஒன்றாக இருக்கும். தற்போதைய மார்க்கெட் டிரெண்டுகளைப் பொறுத்தவரை, மியூச்சுவல் ஃபண்ட் SIPகள் என்பது வழக்கமான முதலீட்டு கருவிகளோடு ஒப்பிடும்போது அதிக ரிட்டன்களை வழங்குகின்றன.
சிறிய அளவிலான தொகைகளை வழக்கமான முறையில் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு SIPகள் ஏற்றதாக இருக்கும். பல Mutual fund திட்டங்களில் SIPகள் மூலமாக ஒருவர் தினமும் 100 ரூபாய் என்ற குறைந்தபட்ச தொகையை கூட முதலீடு செய்யலாம். ஒருவேளை நீங்களும் இந்த Mutual fund SIP திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு வருகிறீர்கள் என்றால் தினசரி SIP திட்டத்தை தேர்வு செய்வதற்கு முன்பு சில முக்கியமான விஷயங்களை நீங்கள் மதிப்பீடு செய்ய வேண்டும்.
தினசரி SIPகள் வழக்கமாக பெரும்பாலான Mutual fund ஹவுஸ்கள் மாத SIPகளை வழங்குகின்றன. எனினும், தினசரி SIPகள் என்பது சீரான மாத வருமானம் பெறாத முதலீட்டாளர்களுக்கானது. தினசரி SIPகள் மூலமாக ஒரு நிர்ணயிக்கப்பட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் தினமும் உங்களால் முதலீடு செய்ய முடியும். நாளடைவில் உங்களுடைய பணமானது வட்டியை சேகரித்து, வட்டிக்கு வட்டி என்ற கணக்கில் சீரான முறையில் வளர ஆரம்பிக்கும். தினமும் சிறிய அளவிலான தொகையை முதலீடு செய்வது கூடுதல் பொருளாதார சுமை இல்லாமல் செல்வத்தை சேமிப்பதற்கு உதவும்.
ஒரு நாளைக்கு 100 ரூபாய் என்ற சிறிய அளவிலான தொகையை சேமிப்பதன் மூலமாக 10 வருடங்களில் உங்களால் பெரிய அளவிலான ஒரு தொகையை நிச்சயமாக சேமிக்க முடியும். இப்போது 10 வருடங்களுக்கு 100 ரூபாய் என்ற தினசரி SIP முதலீட்டிற்கு ஓராண்டுக்கு 12 சதவீத விகிதம் என்ற கணக்கில் உங்களுக்கு கிடைக்கும் ரிட்டன் எவ்வளவாக இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
மொத்த முதலீடு: 3,65,000 ரூபாய்
எதிர்பார்க்கப்படும் ரிட்டன்: ஓராண்டுக்கு 12 சதவீதம்
கால அளவு: 10 ஆண்டுகள்
மொத்த ரிட்டன்: 3,40,735.03 ரூபாய்
மொத்த தொகை: 7,05,735.03 ரூபாய்
தினமும் 100 ரூபாயை தினசரி SIP திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக உங்களால் ஒரே இரவில் பணக்காரர் ஆகிவிட முடியாது. ஆனால், பொருளாதார ஒழுக்கத்தை பின்பற்றுவதற்கு இது உதவியாக இருக்கும். இது ஒரு சிறிய அளவிலான தொகையாக தெரியலாம். தினமும் 100 ரூபாய் என்ற முதலீடு நிச்சயமாக நாளடைவில் உங்களுக்கு பெரிய அளவில் ஒரு ரிட்டனைக் கொடுக்கும். எனினும், உங்களுடைய பொருளாதார தேவைகளின் அடிப்படையில் உங்களுக்கு ஏற்ற ஒரு SIP திட்டத்தை தேர்வு செய்ய ஆலோசனை வழங்கப்படுகிறது.