U.S. President Donald Trump, இரான் உடன் நடந்த சமாதான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த பிறகு, மிகவும் முக்கியமான கடல் பாதையான Strait of Hormuz-ஐ block செய்யலாம் என்று கூறியிருக்கிறார். இந்த இடம் Persian Gulf மற்றும் Arabian Sea-ஐ இணைக்கும் narrow sea route. உலகத்திலேயே மிக முக்கியமான oil transportation பாதை இது. உலகம் முழுக்க பயன்படுத்தப்படும் crude oil-ல் சுமார் 20% இந்த பாதை வழியாக தான் செல்கிறது.
அதனால், இந்த பாதையை அமெரிக்கா block பண்ணினா, இரான் மட்டும் இல்லாமல் மற்ற பல நாடுகளுக்கும் oil export/import பாதிக்கப்படும். Supply குறையும் போது demand அதே மாதிரி இருக்கும், அதனால் oil price தானாகவே அதிகரிக்கும். இதே காரணத்தால், news வந்தவுடன் crude oil price வேகமாக உயர்ந்தது. சில இடங்களில் barrelக்கு $140க்கு அருகே சென்றது.
ஆனா நல்ல விஷயம் என்னனா, negotiations இன்னும் completely முடிஞ்சு போயிடல. இரு நாடுகளும் மீண்டும் பேச வாய்ப்பு இருக்கு. அதனால் situation இன்னும் uncertain stage-ல இருக்க futureல இது settle ஆகலாம் அல்லது இன்னும் worsen ஆகலாம். இந்த issue காரணமாக oil price உயரும், world economy pressureக்கு வரும், மற்றும் war risk கூட அதிகரிக்கும்.