அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் சரியாக முன்னேறாததால், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக புதன்கிழமை Oil prices 1% க்கும் அதிகமாக உயர்ந்தது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு இருந்தாலும், அமெரிக்கா அந்த பகுதியில் கூடுதல் விமானம் தாங்கி கப்பலை அனுப்புவது பற்றி பரிசீலித்து வருகிறது. இதனால் சந்தையில் அபாயம் அதிகரித்துள்ளது.
மேலும், டாலர் மதிப்பு சற்று குறைந்ததால் வெளிநாட்டு வாங்குபவர்களுக்கு oil வாங்குவது எளிதாகி, விலை உயர்ந்தது. சில முக்கிய இடங்களில் oil கையிருப்பு குறைந்ததும் சந்தை இறுக்கமாக இருப்பதை காட்டுகிறது.
அமெரிக்காவின் வாராந்திர oil சரக்கு தரவுகள் வெளியாகும் வரை முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர். சமீபத்திய தகவலின்படி, அமெரிக்காவில் oil கையிருப்பு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.